Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சனி, ராகு, கேதுவால் ஜூன் 17 முதல் அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்...
Saturn, Rahu, Ketu Retrograde 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, நீதிமான் சனி பகவான் தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 ஜூன் 17 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.
இந்த வக்ர நிலையில் அடுத்த 6 மாத காலம் சனி பகவான் பயணிக்க போகிறார். அதேப் போல் ராகு, கேது ஆகிய நிழல் கிரகங்களும் வக்ர நிலையில் பயணித்து வருகின்றன. டிசம்பர் வரை சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் வக்ர நிலையில் இருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

இருப்பினும் 3 ராசிக்காரர்களின் மீது தாக்கமானது சற்று அதிகமாக இருக்கும். இதனால் அவர்கள் சற்று கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக ஆரோக்கியம் மற்றும் நிதி விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்போது எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சனி, ராகு, கேதுவின் வக்ர நிலையானது பல சிக்கல்களைத் தரும். இக்காலத்தில் ஏதேனும் ஒரு விஷயம் உங்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும். செலவுகள் அதிகரிப்பதால், கடன் வாங்கும் வாய்ப்புக்கள் உருவாகும். இக்காலத்தில் யாருக்கும் நீங்கள் கடன் கொடுத்துவிட வேண்டாம். இல்லாவிட்டால் அந்த பணம் திரும்ப கிடைக்காது. வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும். திருமணமான தம்பதிகளுக்கு இடையே சண்டைகள் வர வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி, ராகு, கேது கிரகங்களின் வக்ர நிலையால் அடுத்த 6 மாத காலம் சற்று கடினமாக, தீங்கு விளைவிக்கக்கூடியதாக இருக்கும். இக்காலத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்காமல் ஏமாற்றமடையக்கூடும். உங்கள் வேலையை மாற்ற நினைக்கலாம். ஆனால் அந்த முடிவை எடுக்கும் முன் நன்கு சிந்திக்க வேண்டும். இல்லாவிட்டால் கஷ்டப்பட வேண்டியிருக்கும். வியாபாரிகளின் பணம் எங்காவது சிக்கும் வாய்ப்புள்ளது. சட்ட சிக்கல்களால் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லையெனில் விபத்து ஏற்படலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி, ராகு, கேது வக்ர நிலையானது பல இழப்புக்களை சந்திக்க வைக்கும். ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இக்காலகட்டத்தில் எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்காதீர்கள். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். வியாபாரிகள் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளருடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்கக்கூடும். அடுத்த 6 மாத காலம் கொடுக்கல் வாங்கலில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய நிதி இழப்பை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications