சனி ராகு சேர்க்கையால் அக்டோபர் 17 வரை இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்...

Saturn Rahu Conjunction: வேத ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். ஒருவர் நல்ல செயல்களை செய்தால், நற்பலனையும், கெட்ட செயல்களை செய்தால் கெடு பலனையும் வழங்குவார். கிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ராசியை மாற்ற 2 1/2 ஆண்டுகள் ஆகும்.

சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமின்றி, நட்சத்திர மாற்றமும் அவ்வப்போது நிகழும். அப்படி மாற்றங்கள் ஏற்படும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் சதய நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். சதய நட்சத்திரமானது ராகுவின் நட்சத்திரமாகும்.

Saturn Rahu Conjunction: These Zodiac Signs Face Financial Problems In Tamil

ராகுவின் நட்சத்திரத்தில் சனி பயணிப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அதுவும் இந்த பயணமானது அக்டோபர் 17 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். மேலும் இந்த பயணத்தால் சில ராசிக்காரர்களின் கஷ்டங்கள் அதிகரிக்கும். முக்கியமாக பண பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும். இப்போது எத்த ராசிக்காரர்கள் அக்டோபர் 17 வரை கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் சனி ராகு சேர்க்கையால் நிறைய ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக பெற்றோரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறுக்கு வழியில் அல்லது தவறான வழியில் பணத்தை சம்பாதிப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் இக்காலத்தில் சிக்குவதற்கான வாய்ப்புள்ளது. இதன் காரணமாக உங்கள் மீது இருந்த மரியாதை போகலாம். உறவுகளில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கும்பம்

கும்ப ராசியின் சதய நட்சத்திரத்தில் சனி பகவான் இருப்பதால், இந்த ராசிக்காரர்களின் சிரமங்கள் அதிகரிக்கும். அக்டோபர் 17 வரை இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இந்த காலத்தில் எந்த ஒரு முக்கிய முடிவை எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். தேவையல்ல செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்குவதற்கான சூழல் உருவாகும். குடும்பத்தினருடன் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். மேலும் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்காக நிறைய செலவுகளை செய்ய வேண்டியிருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் அக்டோபர் 17 வரை கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளால் மன உளைச்சலுக்கு ஆளாகலாம். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகள் அதிக பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, October 6, 2023, 15:40 [IST]
Desktop Bottom Promotion