Latest Updates
-
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம்
சனி-ராகு சேர்க்கையால் அக்டோபர் 17 வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்...
Saturn Rahu Conjunction In Sathayam Nakshatra: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் உண்டு. மேலும் ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். அதேப் போல் நட்சத்திரங்களையும் மாற்றும்.
அப்படி மாற்றும் போது சில சமயங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கை நிகழ்வதுண்டு. இப்படி நிகழும் சேர்க்கையால் சுப அல்லது அசுப தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் நீதிமான் சனி பகவான் தற்போது சதய நட்சத்திரத்தில் உள்ளார். இந்த சதய நட்சத்திரமானது ராகுவின் நட்சத்திரமாகும். சனியும், ராகுவும் இணைந்திருப்பதால், அதன் தாக்கம் சில ராசிகளில் சற்று மோசமாக இருக்கும்.
சனி பகவான் இந்த சதய நட்சத்திரத்தில் அக்டோபர் 17 வரை இருப்பார். இதனால் சனி ராகு சேர்க்கையால் அக்டோபர் 17 வரை சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் சனி-ராகு சேர்க்கையால் கவனமாக இருக்க வேண்டும். இச்சேர்க்கை காலத்தில் இந்த ராசிக்காரர்களின் கஷ்டங்கள் அதிகரிக்கும். நிறைய சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். முதலீடு செய்ய நினைத்தால், அதை இக்காலத்தில் செய்ய வேண்டாம். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். நிதி நிலைமை சற்று மோசமாகவே இருக்கும். மேலும் மன அழுத்தமும் அதிகமாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சனி ராகு சேர்க்கையால அக்டோபர் வரை சற்று கஷ்டமாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் சிரமங்களை சந்திக்க நேரிடும். பண இழப்புக்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்பதால் இக்காலத்தில் எந்த முதலீடுகளை செய்வதையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
கன்னி
சனி ராகு சேர்க்கையால் கன்னி ராசிக்காரர்கள் அக்டோபர் 17 வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் அதிக செலவுகளால், பலவகையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சில சமயங்களில் பண பிரச்சனையால் பெரிய சிக்கலில் சிக்கி, மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடும். எனவே அக்டோபர் வரை இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications