Latest Updates
-
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது!
சனி மற்றும் ராகுவால் அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்.. உங்க ராசியும் இதுல இருக்கா?
Saturn Rahu Conjunction 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் சீரான இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, நட்சத்திரங்களையும் மாற்றும். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் நீதிமான் சனி பகவான் தற்போது சதயம் நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இந்த நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 17 ஆம் தேதி வரை பயணிப்பார்.

சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் பயணிப்பதால், சனி மற்றும் ராகுவால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஏனெனில் சதயம் நட்சத்திரத்தின் அதிபதி ராகு. எனவே அக்டோபர் வரை சில ராசிக்காரர்கள் சனி-ராகுவால் மோசமான பலன்களைப் பெறுவார்கள்.
குறிப்பாக வாழ்வில் கஷ்டங்கள் அதிகரிக்கும் மற்றும் தொழிலில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இப்போது கவனமாக இருக்க வேண்டிய அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அக்டோபர் வரை பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளக்கூடும். ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். கடைகளில் வாங்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இக்காலத்தில் நிதி நிலைமை மோசமாக இருப்பதால், வீட்டு செலவுகளுக்காக கடன் வாங்க வேண்டியிருக்கும். எந்த ஒரு புதிய வேலையையும் அக்டோபர் வரை தொடங்காதீர்கள். மேலும் முதலீடு செய்வதாக இருந்தால், நன்கு சிந்தித்து செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
மீன ராசிக்காரர்கள் அக்டோபர் மாதம் வரை தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். இதனால் இந்த ராசிக்காரர்களின் பட்ஜெட் பாதிக்கப்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, முழங்கால் தொடர்பான பிரச்சனையால் அவதிப்படக்கூடும்.
வாழ்க்கைத் துணையுடன் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தேவையில்லாத பயணங்களை செய்ய வேண்டியிருக்கும். பணிபுரிபவர்கள் அக்டோபர் வரை சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உடன் வேலை செய்வோருடன் நிறைய கருத்து வேறுபாடுகளை சந்திக்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அக்டோபர் வரை தொழில் மற்றும் வியாபாரத்தில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். அரசு வேலை செய்பவர்கள் உயர் அதிகாரியுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்கக்கூடும்.
காதலிப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உறவுகளில் விரிசல் ஏற்பட்டுவிடும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். மேலும் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications