Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
சனி நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 24 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியும், பணமும் குவியப் போகுது...
Saturn Nakshatra Transit In Sathayam On November 2023: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றுவதைத் தவிர, நட்சத்திரங்களையும் அவ்வப்போது மாற்றுகின்றன. அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அதுவும் நவகிரகங்களில் சனி பகவானின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றம் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் நவம்பர் 24 ஆம் தேதி சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி நிகழவுள்ளது.

இப்பெயர்ச்சியின் போது சனி பகவான் சதய நட்சத்திரத்திற்கு செல்கிறார். சதய நட்சத்திரமானது ராகுவின் நட்சத்திரமாகும். சனி பகவான் கும்ப ராசியில் ராகுவின் நட்சத்திரத்தில் பயணிப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு ஏராளமான வெற்றியும், பணமும் சேரும். இப்போது சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சனியின் நட்சத்திர பெயர்ச்சி
ஜோதிடத்தின் படி, சனி பகவான் 2023 நவம்பர் 24 ஆம் தேதி மாலை 3.04 மணிக்கு சதயம் நட்சத்திரத்தில் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் 2024 ஏப்ரல் 06 ஆம் தேதி வரை பயணிப்பார். இதனால் அடுத்த 5 மாத காலம் சனி பகவான் சில ராசிக்காரர்களுக்கு நற்பலனை வாரி வழங்குவார்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் நட்சத்திர மாற்றத்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். சிலரது நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்களின் உதவி கிடைக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளைப் பெறக்கூடும். பணிபுரிபவர்கள் அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
சனி பகவானின் அருளால் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். நீண்ட காலமாக ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், இப்பெயர்ச்சிக்கு பின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியானது ரிஷப ராசிக்காரர்களுக்கு பல வெற்றிகளை வழங்கப் போகிறது. முக்கியமாக கடின உழைப்புக்கான பலன் இரட்டிப்பாக கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், இந்த நட்சத்திர பெயர்ச்சிக்கு பின் நல்ல வேலை கிடைக்கும்.
வெளிநாடு செல்ல முயற்சித்து வந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் அதிக லாபத்தைப் பெறுவார்கள். தாயாரின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடன் வேலை செய்வோரிடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியம் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கும் சனியின் நட்சத்திரப் பெயர்ச்சியானது நற்பலனை வாரி வழங்கும். குறிப்பாக தொழில் வாழ்க்கை மிகவும் அற்புதமாக இருக்கும். சிலருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும் மற்றும் அவருடன் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். கூட்டுதொழில் செய்து வந்தால், நல்ல லாபத்தைப் பெறலாம். வியாபாரிகள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள். மொத்தத்தில் சனி பகவானின் அருளால் நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications