Latest Updates
-
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சனி நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் முதல் இந்த ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழியப்போகுது..
Saturn Nakshatra Transit 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதைத் தவிர, நட்சத்திரங்களையும் மாற்றும். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் நீதிமான் சனி பகவான் தற்போது சதய நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் ஏப்ரல் 07 ஆம் தேதி சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான். சனி பகவான் குரு பகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அனைத்து ராசிகளிலுமே இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் தெரியும்.

குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த சனி நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறவுள்ளார்கள். அதோடு நல்ல பண வரவையும், வெற்றியையும் காணவுள்ளார்கள். இப்போது சனி நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல பண வரவைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
சனி நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வசதிகளும் அதிகரிக்கும். திருமணமானவர்கள் குழந்தைகளால் நல்ல செய்தியைப் பெறுவார்கள். புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். முக்கியமாக பழைய முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
சனி நட்சத்திர பெயர்ச்சியானது ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருந்தால், எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தந்தையுடனான உறவு மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். முக்கியமாக வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சியானது மங்களகரமானதாக இருக்கும். முக்கியமாக இந்த ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் முதல் அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக இருக்கும். இதனால் செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். உங்களின் மரியாதை அதிகரிக்கும். புதிய வேலையைத் தொடங்கினால், அதில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். சிலருக்கு வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications