Latest Updates
-
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
சனியின் நட்சத்திர பெயர்ச்சி: அடுத்த 50 நாட்கள் இந்த 3 ராசிகளுக்கு பண வரவு அதிகமா இருக்கும்...
Saturn Nakshatra Transit 2023: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதைத் தவிர, நட்சத்திரங்களையும் மாற்றும். அப்படி நட்சத்திரங்களை மாற்றும் போதும், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அந்த வகையில் நீதிமான் சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் தனது சொந்த ராசியான கும்ப ராசிக்குள் நுழைந்தார். அதோடு வக்ர நிலையிலும் பயணித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி சனி பகவான் ராகுவின் சதய நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். இந்த சதய நட்சத்திரத்தில் அக்டோபர் 15 ஆம் தேதி வரை இருப்பார்.

சனி பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் பயணிப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் திடீர் பண வரவையும், பல வெற்றிகளையும் காண்பார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் தைரியம் அதிகரிக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழிலை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றிகரமாக இருக்கும். உடன்பிறந்தவர்களின் அதரவு கிடைக்கும். மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த புதனும், சனி பகவானும் நட்பு கிரகங்கள் என்பதால், நல்ல நன்மைகள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியானது சிறப்பான பலன்களை அள்ளி தரும். இக்காலத்தில் வருமானத்தில் உயர்வு ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தை விரிவாக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். மேலும் வாழ்க்கைத் துணையால் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ளது.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் வருமானத்தில் உயர்வை காண்பார்கள். இக்காலத்தில் போடப்படும் திட்டங்கள் வெற்றிகரமாக முடிக்கப்படும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பழைய முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். வாகனம் அல்லது சொத்து வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications