Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
சனி சந்திரனால் உருவாகும் விஷ யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Vish Yoga On September 2023: ஜோதிடத்தில் சனி மிகவும் கொடூரமான கிரகமாக கருதப்படுகிறது. ஏனெனில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலனை அளிப்பவர். சனி பகவானின் நிலையில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும், அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும். சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
கும்ப ராசியில் சனி பகவான் பயணித்து வரும் போது, மற்ற கிரகங்களின் நிலைகளிலும் மாற்றங்கள் ஏற்படுவதால், சில சமயங்களில் சனியுடன் பிற கிரகங்களின் சேர்க்கைகளும் நிகழும். இப்படி சனியுடன் பிற கிரகங்களின் சேர்க்கை நிகழும் போது, சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும்.

அந்த வகையில் சந்திரன் மற்றும் சனி பகவானின் சேர்க்கையால் செப்டம்பர் 12 ஆம் தேதி மிகவும் மோசமான யோகம் உருவாகவுள்ளது. அது தான் விஷ யோகம். இந்த விஷ யோகமானது மன அழுத்தம், வெறுப்புணர்வு, வறுமை, பதட்டம் மற்றும் பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். இப்போது சந்திரன் மற்றும் சனியின் சேர்க்கையால் உருவாகும் விஷ யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சந்திரன் சனி உருவாக்கும் விஷ யோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக தொழில் வாழ்க்கை மோசமாக இருக்கும். பணிபுரிபவர்கள் தங்களுடன் வேலை செய்வோருடன் பிரச்சனைகளை சந்திக்கலாம். நம்பிக்கையின்மை ஏற்படக்கூடும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் கெட்ட பெயரை பெறக்கூடும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு விஷ யோகத்தால் செப்டம்பர் 12 முதல் அடுத்த இரண்டு நாட்கள் சற்று மோசமாக இருக்கும். அதுவும் இக்காலத்தில் விபத்துக்கள், காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். எதிர்பாராத மற்றும் சவாலான சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். சண்டைகள், சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும். மனம் ஒருவித பதட்டத்துடனேயே இருக்கும். எதிர்காலம் பற்றிய கவலை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் விஷ யோகத்தால் செப்டம்பர் 12 முதல் பல பிரச்சனைகளை சந்திக்கலாம். குறிப்பாக திருமண வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். வணிகர்கள் கூட்டாளருடன் சண்டையில் ஈடுபடலாம். நிதி சிக்கல்களை சந்திக்கலாம். மனம் ஒருவித பதட்டத்துடன் இருக்கும். இக்காலத்தில் மற்றவர்களுடன் சண்டைகளில் ஈடுபடுவீர்கள் மற்றும் பழி வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கை சற்று மோசமாகவே இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு விஷ யோகமானது மன ஆரோக்கியத்தை பாதிக்கும். இக்காலத்தில் அதிகமாக கவலைப்படுவீர்கள். ஞாபக மறதியை சந்திக்கக்கூடும். தேவையற்ற கவலைகளால் சூழ்ந்திருப்பீர்கள். எந்த ஒரு வேலையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். மேலும் பல காரியங்களில் தடைகளால் ஏமாற்றத்தை சந்திக்கக்கூடும். திருமண வாழ்க்கை மோசமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகளை அதிகம் சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications