Latest Updates
-
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க
சனி சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: ஏப்ரல் 15 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Saturn Moon Make Vish Yoga On April 2023: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அதன் விளைவாக சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அந்த யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் 2023 ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசிக்குள் நுழைந்தார். சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் என்றால், அது சனி தான்.

அதேப் போல் வேகமாக நகரக்கூடிய கிரகம் சந்திரன். இந்த சந்திரன் இரண்டரை அல்லது மூன்று நாட்களில் ராசியை மாற்றும். இந்நிலையில் கும்ப ராசியில் பயணித்து வரும் சனியுடன், சந்திரன் இணைந்து பயணிக்கவுள்ளார். அதுவும் 2023 ஏப்ரல் 15 ஆம் தேதி இந்த சேர்க்கை நிகழவுள்ளது.
இந்த சேர்க்கையால் விஷ யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தால் 3 ராசிக்காரர்கள் பண இழப்பையும், நிறைய பிரச்சனைகளையும் சந்திக்க வாய்ப்புள்ளது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் விஷ யோகமானது உருவாகவுள்ளதால், கடக ராசிக்காரர்கள் தங்களின் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் வயதானவர்கள் இருந்தால், அவர்களின் ஆரோக்கியம் மோசமடைய வாய்ப்புள்ளது.
ஏற்கனவே கடக ராசிக்காரர்களுக்கு சனியின் தாக்கம் இருப்பதால், எந்த ஒரு புதிய வேலைகளையும் இந்த ராசிக்காரர்கள் தொடங்குவது நல்லதல்ல. இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்யாமல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் விஷ யோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. நீதிமன்ற வழக்குகளில் தோல்வியை சந்திக்கக்கூடும். அதிக செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டில் வயதானவர்கள் இருந்தால், அவர்களின் ஆரோக்கியம் மோசமடையலாம்.
இந்த காலகட்டத்தில் ஒரு பெரிய அல்லது முக்கியமான விஷயத்தை செய்ய திட்டமிட்டிருந்தால், அதை தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் தோல்வியை சந்திக்க நேரிடும். விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் விஷ யோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலத்தில் விருச்சிக ராசிக்காரர்களின் மனம் சற்று அமைதியற்று இருக்கும். சனியின் தாக்கம் இருப்பதால், சற்று கவனமாக இருக்க வேண்டும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
இக்காலத்தில் சில கெட்ட செய்திகளை பெறக்கூடும். பணிபுரிபவர்கள் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் பண விஷயத்தில் அலட்சியத்தை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications