Latest Updates
-
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்
சனி சந்திரனால் உருவான விஷ யோகம்: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..!
Vish Yoga 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் ஒரே ராசியில் ஒன்றாக பயணிக்கும் போது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அந்த வகையில் நீதிமான் சனி பகவானுடன், சந்திரன் இணைந்து பயணிக்கும் போது உருவாகும் யோகம் தான் விஷ யோகம்.
இந்த விஷ யோகமானது ஒரு அசுப யோகமாக கருதப்படுகிறது. இந்த யோகம் 2023 ஜூன் 09 ஆம் தேதி உருவாகிறது. சந்திரன் 2023 ஜூன் 09 ஆம் தேதி காலை மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குள் நுழைகிறார்.

கும்ப ராசியில் ஏற்கனவே சனி பகவான் பயணித்து வருகிறார். இதனால் ஜூன் 09 ஆம் தேதி கும்ப ராசியில் சனி சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகிறது. இந்த யோகமானது சந்திரன் கும்ப ராசியில் இருக்கும் இரண்டரை நாட்கள் வரை நீடித்திருக்கும்.
இதனால் இந்த இரண்டரை நாட்கள் சில ராசிக்காரர்கள் கடுமையான பண பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது மற்றும் பல இழப்புக்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இப்போது கும்ப ராசியில் உருவாகியுள்ள விஷ யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் பெரும் சரிவு ஏற்படக்கூடும். திருமணமானவர்கள் தங்கள் குழந்தையின் எதிர்காலம் குறித்து சற்று அதிகமாக கவலைப்படலாம். எதிரிகள் இக்காலத்தில் உங்களை வீழ்த்த சதி செய்வார்கள். அந்த சதியில் சிக்கி வெளிவர முடியாமல் அவதிப்பட வேண்டியிருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்கலாம். சொத்து காரணமாக குடும்ப உறுப்பினர்களிடையே பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இந்த பிரச்சனையை வீட்டிலேயே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இழப்பு உங்களுக்கே ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகியுள்ளது. இதனால் கும்ப ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்கலாம். ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். மேலும் இக்காலத்தில் உங்கள் ஈகோவை விலக்கி வைப்பது நல்லது. இல்லாவிட்டால், அதுவே உங்களுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். குறிப்பாக குடும்ப வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications