Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
சனி சந்திர சேர்க்கையால் உருவாகும் விஷ யோகம்: ஜூலை 06 முதல் இந்த ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்..
Saturn Moon Form Vish Yoga In July 2023: நவகிரகங்களில் சந்திரன் மிகவும் மென்மையானவர். இந்த சந்திரன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துகிறார். இந்த சந்திரன் கடக ராசியின் அதிபதியாவார். முக்கியமாக கிரகங்களிலேயே சந்திரன் மிகவும் குறுகிய காலத்தில் ராசியை மாற்றுபவர். அதேப் போல் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர். இந்த சனி மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார்.
இந்த சனி மற்றும் சந்திரன் எதிரிகளாவர். இவ்விரு கிரகங்களின் சேர்க்கையும் மிகவும் கொடிய விஷ யோகத்தை உருவாக்கும். விஷ யோகமானது தேவையில்லாத மன அழுத்தம், நம்பிக்கை இழப்பு, பதட்டம், மனச்சோர்வு, தலைமைப் பண்புகளை இழப்பது மற்றும் தற்கொலை எண்ணங்களைக் கூட எழ வைக்கும்.

தற்போது சனி பகவான் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 ஜூலை 06 ஆம் தேதி சந்திரனும் கும்ப ராசிக்குள் நுழைந்து, சனியுடன் சேர்ந்து விஷ யோகத்தை உருவாக்கவுள்ளது. இந்த விஷ யோகமானது ஜூலை 08 ஆம் தேதி வரை நீடித்திருக்கும்.
இதனால் இந்த கொடிய யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 2 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் மோசமாக பாதிக்கப்படவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகிறது. இதனால் இக்காலத்தில் சிம்ம ராசிக்காரர்கள் தங்களின் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். தம்பதியர்களுக்கு இடையே சண்டை அதிகரிக்கும். இவ்விரு நாட்களும் வாழ்க்கைத் துணையுடன் சண்டை நீடித்திருப்பதால், அது மிகுந்த மன கவலையைத் தரலாம். மேலும் வீட்டின் சூழலும் மோசமாக இருக்கும். இக்காலத்தில் வெளியே சொல்ல முடியாத சோகம் உங்களை வாட்டி வதைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகிறது. இதனால் இக்காலத்தில் எதிரிகள் உங்களை வீழ்த்த முயற்சிப்பார்கள். நீதிமன்ற வழக்குகள் நடந்து வந்தால், தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வராமல் போகலாம். அலுவலகத்தில் நடக்கும் அரசியலுக்கு பலியாக வாய்ப்புள்ளது. இதனால் உங்களின் மன கவலை அதிகரிக்கலாம். நிம்மதியான தூக்கம் கிடைக்காமல் அவதிப்படக்கூடும். மொத்தத்தில் இக்காலம் மிகவும் மோசமாக இருக்கும்.
விஷ யோகத்தால் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்கும் பரிகாரங்கள்
* சந்திராஷ்டம் மற்றும் சனிக்கிழமைகளில் சந்திரனுக்கும், சனி பகவானுக்கும் பூஜைகளை செய்வது நல்லது.
* விஷ யோகத்தின் தாக்கத்தைக் குறைக்க ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம்.
* திங்கட்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் விரதமிருப்பது மோசமான தாக்கத்தைக் குறைக்கும்.
* சனிக்கிழமைகளில் அரச மரத்திற்கு நீரை ஊற்றுவது விஷ யோகத்தால் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்கும்
* ருத்ராபிஷேகம் செய்வது நற்பலனை அளிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications