Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சனி-சந்திரன் சேர்க்கையால் உருவான விஷ யோகம்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Saturn Moon Conjunction On September 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் இணைந்து ஒரே ராசியில் பயணிக்கும் சூழல் ஏற்படும். அப்படி கிரகங்கள் சேரும் போது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாவதுண்டு.
அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் நீதிமான் சனி பகவானும், சந்திரனும் இணைந்து விஷ யோகத்தை உருவாக்கியுள்ளார்கள்.

இந்த சேர்க்கையானது செப்டம்பர் 27 ஆம் தேதி மாலை உருவாகியுள்ளது. இந்த சேர்க்கையால் உருவான விஷ யோகமானது மிகவும் மோசமான யோகம். சந்திரன் ஒரு ராசியில் 2 நாட்கள் வரை பயணிப்பார். எனவே இந்த யோகத்தின் தாக்கமானது 2 நாட்கள் இருக்கும்.
அனைத்து ராசிகளிலும் இந்த தாக்கம் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த தாக்கத்தால் மோசமான பலனைப் பெறவுள்ளார்கள். இப்போது விஷ யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு விஷ யோகமானது பல பிரச்சனைகளை வரவழைக்கும். குறிப்பாக ஆரோக்கியத்தில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
பணியிடத்தில் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பேச்சை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதோடு அடுத்த 2 நாட்கள் மிகவும் டென்சன் நிறைந்ததாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு விஷ யோகமானது தீங்கை விளைவிக்கும். இக்காலத்தில் உங்களின் எதிரிகள் அதிகரிப்பார்கள். அலுவலகத்தில் மற்றும் உங்களைச் சுற்றி இருப்பவர்கள் யாரேனும் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். ஆகவே கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
இக்காலத்தில் பயணத்தை தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் தேவையில்லாத பிரச்சனையில் சிக்க வாய்ப்புள்ளது. உங்களின் உடைமைகளை கவனமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு விஷ யோகம் அசுப பலன்களைத் தரும். அடுத்த 2 நாட்கள் உங்கள் மீது தேவையில்லாத பழி சுமத்தப்படும். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். ஆரோக்கியம் மோசமடையக்கூடும்.
செலவுகள் கைமீறி போகும். தேவையில்லாத சண்டைகளை சந்திப்பீர்கள். அடுத்த 2 நாட்களுக்கு எந்தஒரு புதிய வேலையையும் செய்யாதீர்கள். மொத்தத்தில் மன அழுத்தம் அதிகமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications