Latest Updates
-
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்..
சனி-சந்திர சேர்க்கையால் உருவாகும் விஷ யோகம்: மே 13 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Saturn-Moon Conjunction: நவகிரகங்களில் சனி என்றாலே ஒவ்வொருவரும் பயப்படுவோம். ஏனெனில் சனி ஒருவரின் கர்ம வினைகளுக்கு ஏற்ப பாரபட்சம் பாராமல் பலன்களை வழங்குவார். சனியின் பரிபூர்ண அருள் கிடைத்தால், ஆண்டியும் அரசனாவான். அதுவே அவரது கோபத்திற்கு ஆளானால், அரசனும் ஆண்டியாவான். அவ்வளவு சக்தி வாய்ந்த கிரகம் தான் சனி.
அதே சமயம் நவகிரகங்களில் சந்திரன் மிகவும் சாந்தமான கிரகமாகும். இப்படிப்பட்ட சந்திரனுடன் சனி ஒன்றிணைந்து பயணிக்கும் போது மிகவும் மோசமான விஷ யோகம் உருவாகம். அந்த விஷ யோகமானது 2023 மே 13 ஆம் தேதி உருவாகவுள்ளது. இந்த யோக காலத்தில் நற்பலன்களை விட கெடுபலன்களையே அதிகம் பெறக்கூடும்.

அந்த வகையில் சனி சந்திர சேர்க்கையால் உருவாகும் விஷ யோகத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மற்றும் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிக்காரர்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் விஷ யோகம் உருவாகிறது. முக்கியமாக இந்த யோகத்தின் போது கடக ராசியின் அதிபதியும் லக்ன வீட்டில் இருக்கிறார். அதோடு சனியின் தாக்கமும் உள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. முக்கியமாக இக்காலத்தில் எந்த ஒரு புதிய வேலையைத் தொடங்குவதையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் விஷ யோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலம் கன்னி ராசிக்காரர்களுக்கு சவாலானதாக இருக்கும். எதிரிகளால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபட நேரிடும். இதனால் உங்களின் மன அமைதி பாழாகும். பணிபுரிபவர்கள் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. அதிக செலவுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பண பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் விஷ யோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலத்தில் தேவையில்லாத பயணங்களை செய்ய வேண்டியிருக்கும். யாருடனாவது வாக்குவாதத்தில் ஈடுபடலாம் அல்லது சண்டை போட வாய்ப்புள்ளது.
ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளன. இக்காலத்தில் மற்றவர்கள் வீணாக உங்கள் மீது பழி போடலாம். ஏழரை சனி நடப்பதால், நிதி பிரச்சனைகள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications