சனி, புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 15 முதல் இந்த 6 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கப் போகுது...

Saturn Mercury Nakshatra Transit On October 2023: நவகிரகங்களில் புத்திகாரகன் என்று அழைக்கப்படுபவர் புதன், அதேப் போல் நீதிமான் என்ற அழைக்கப்படுபவர் சனி பகவான். இதில் புதன் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர்.

சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். ஆனால் இவ்விரு கிரகங்களின் நட்சத்திர பெயர்ச்சி ஒரே நாளில் நிகழவுள்ளது. அதுவும் அக்டோபர் 15 ஆம் தேதி இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

Saturn Mercury Nakshatra Transit On October 2023: Effects On All Zodiac Signs In Tamil

இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது சனி பகவான் அவிட்டம் நட்சத்திரத்திற்கும், புதன் சித்திரை நட்சத்திரத்திற்கும் செல்கிறார். இவ்விரு கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்களும், வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போது சனி மற்றும் புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் அக்டோபர் 15 முதல் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர பெயர்ச்சிக்கு பின் வாழ்க்கையில் எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம். இலக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! சனி, புதன் நட்சத்திர பெயர்ச்சிக்கு பின் பணியிடத்தில் உங்களின் திறமை கௌரவிக்கப்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் நல்ல பண வரவைப் பெறக்கூடும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த நட்சத்திர பெயர்ச்சிக்கு பின் உங்கள் தொழிலில் நீங்கள் நனைத்தது அனைத்துமே நடக்கும். இக்காலத்தில் உங்களின் இலக்குகளை வெற்றிகரமாக அடைவீர்கள். தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களைப் பெறக்கூடும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! சனி, புதன் நட்சத்திர பெயர்ச்சிக்கு பின் எப்படிப்பட்ட சவாலையும் திறம்பட சமாளிப்பீர்கள். பணியிடத்தில் உங்களின் உணர்வுகளை உயர் அதிகாரிகளிடம் வெளிப்படுத்த சற்று சிரமப்படுவீர்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு, தங்கள் கூட்டாளருடன் இருந்த பிரச்சனைகளை பேசித் தீர்க்க வாய்ப்புகள் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த நட்சத்திர பெயர்ச்சிக்கு பின் புதிய நபர்களின் நட்பைப் பெறலாம். இந்த நட்பால் உங்களின் தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்ய நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இக்காலத்தில் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த நட்சத்திர பெயர்ச்சிக்கு பின் நீங்கள் உங்கள் தொழிலில் தீவிரமாக ஈடுபட வேண்டும். இக்காலகட்டம் சற்று அழுத்தம் நிறைந்தாக இருக்கும். இக்காலத்தில் புதிய சாதனைகளை புரிய வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல வளர்ச்சியை காண உதவக்கூடியவர்களை இக்காலத்தில் நீங்கள் சந்திக்கலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இந்த நட்சத்திர பெயர்ச்சிக்கு பின் உங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு மோசமான சம்பவத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. அதை எதிர்கொள்ள தயாராக இருங்கள். இக்காலத்தில் பணத்தை சம்பாதிப்பதில் கவனத்தை செலுத்துவதை விட, உங்களிடம் உள்ள குறைகளில் கவனத்தை செலுத்தி, அதை சரிசெய்ய முயலுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த நட்சத்திர பெயர்ச்சிக்கு பின் உங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவது பற்றி சிந்தித்தால் நல்ல பலனைப் பெறலாம். ஏனெனில் இக்காலத்தில் சனி மற்றும் புதனின் அருளால் வாழ்க்கையில் எதிர்பாராத வளர்ச்சியைக் காண்பீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த சனி புதன் நட்சத்திர பெயர்ச்சிக்கு பின் நீங்கள் சற்று சாமர்த்தியமாக நடந்து கொள்ள வேண்டும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் எப்போது வேண்டுமானானும் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இக்காலத்தில் விவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பிற்காலத்தில் வருத்தப்படுவீர்கள். மொத்தத்தில் சற்று பொறுமையாக இருக்க வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! சனி மற்றும் புதனின் நட்சத்திர பெயர்ச்சிக்கு பின் தொழிலில் எந்த ஒரு முக்கியமான முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும், அனுபவசாலிகளிடம் ஆலோசனை கேட்பது நல்லது. ஏனெனின் தவறான முடிவுகள் உங்கள் வாழ்க்கையையே மோசமாக பாதிக்கலாம். எனவே எந்த ஒரு முடிவையும் யோசித்து எடுங்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! சனி புதன் பெயர்ச்சிக்கு பின் சிறு பிரச்சனையும் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். ஆனால் இக்காலத்தில் முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்புக்களைப் பெறக்கூடும். உங்களின் பகுத்தறிவு சிந்தனை மேலோங்கும். உங்கள் அன்பானவர்களின் ஆலோசனையைப் பெற்று நடந்தால், நற்பலனைப் பெறலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த சனி புதன் பெயர்ச்சிக்கு பின் பணியிடத்தில் உங்களுக்கு பொறுப்புகள் அதிகம் வழங்கப்படலாம். தொழில் ரீதியாக, முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைத்தால், அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆலோசனையையும் கேட்டு நடந்து கொண்டால், பெரிதும் பயனடைவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, October 13, 2023, 9:24 [IST]
Desktop Bottom Promotion