Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
30 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சனி-புதன் சேர்க்கை: பிப்ரவரி 20 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..
Saturn Mercury Conjunction In Aquarius On 20 February 2024: வேத ஜோதிடத்தில் புதன் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுகிறார். மேலும் இவர் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வணிகம், பங்குச் சந்தை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். அதே வேளையில் சனி பகவான் நீதிமான். ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர்.
இந்த சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் பிப்ரவரி 20 ஆம் தேதி புதன் கும்ப ராசியில் நுழையவுள்ளார். இதனால் கும்ப ராசியில் சனி மற்றும் புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கை சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளதால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.

சனி, புதன் சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் லாபத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது கும்ப ராசியில் நிகழும் சனி புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சிலர் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெறலாம்.
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களின் தைரியம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள், தங்கள் வருமானத்தில் உயர்வை காண்பார்கள். மாணவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். வெளிநாடு சென்று படிக்க விரும்பும் ஆசை இருந்தால், அது இக்காலத்தில் நிறைவேறும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல மரியாதையைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
சமூகத்தில் உயர் நிலையில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திருமணமாகாதவர்கள் இக்காலத்தில் வாழ்க்கைத் துணையைப் பெறலாம். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால் நல்ல வேலை கிடைக்கும். வேலையை மாற்ற நினைத்தால், நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு தேடி வரும்.
உங்களின் வருமானம் அதிகரிக்கும். பேச்சால் பலரை ஈர்ப்பீர்கள் மற்றும் பல காரியங்களை சாதிப்பீர்கள். பங்குச் சந்தை மற்றும் பேச்சு தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications