Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கோவை ஸ்பெஷல் உப்பு பருப்பு - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
1 கப் பச்சரிசியும், வெல்லமும் இருந்தா இந்த செட்டிநாடு கந்தர் அப்பத்தை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும்
30 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் நிகழும் சனி-புதன் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது...
Saturn Mercury Conjunction 2024 In Aquarius: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறும். அப்படி மாறும் போது சில நேரங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டியிருக்கும். அப்படி கிரகங்கள் இணைந்து பயணிக்கும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பின் சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் புதனும் கும்ப ராசியில் நுழையவுள்ளார். இதனால் கும்ப ராசியில் சனி மற்றும் புதனின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த நிகழ்வானது சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் நிகழவிருக்கிறது.

இந்த சேர்க்கையின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த சேர்க்கை காலத்தில் திடீர் பண வரவையும், அதிர்ஷ்டத்தின் ஆதரவால் முன்னேற்றத்தையும் காணவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி மற்றும் புதனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். படைப்புத் துறையில் இருப்பவர்கள் நிறைய முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இக்காலத்தில் போடப்படும் நிதி திட்டங்கள் நல்ல லாபத்தைத் தருவதாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தினசரி வருமானத்தில் உயர்வைக் காணக்கூடும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி மற்றும் புதனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். இக்காலத்தில் போடப்படும் திட்டங்கள் வெற்றி பெறும். தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வணிகர்கள் வெளிநாட்டு ஒப்பந்தங்களால் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். சிலர் வேலை மற்றும் வியாபாரம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்கள் நல்ல நிதி ஆதாயத்தைத் தருவதாக இருக்கும். சுப காரியங்களில் பங்கேற்கவும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் மற்றும் சனியின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே பிணைப்பும், அன்பும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்தவாறான முடிவுகளைப் பெறக்கூடும். பணிபுரிபவர்கள் முன்னேற்றத்திற்கான சில நல்ல வாய்ப்புக்களைப் பெறுவார்கள். சனி பகவான் சச ராஜயோகத்தை உருவாக்கியுள்ளதால், தினசரி வருமானத்தில் உயர்வு ஏற்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications