Latest Updates
-
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
சனி செவ்வாய் உருவாக்கும் ஷடாஷ்டக யோகம்: இந்த 3 ராசிக்காரங்க மே 10 முதல் கவனமா இருக்கணும்...
Saturn Mars Make Shadashtak Yoga: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகலாம். இப்படி உருவாகும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் மே 10 ஆம் தேதி மிகவும் மோசமான ஷடாஷ்டக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது செவ்வாய் மற்றும் சனியால் உருவாகவுள்ளது. நவகிரகங்களில் தைரியம், வீரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் செவ்வாய் மே 10 ஆம் தேதி பலவீனமான ராசியான கடக ராசிக்குள் நுழைகிறார்.

இப்படி செவ்வாய் கடக ராசிக்குள் நுழையும் போது, சனி-செவ்வாயால் 6-க்கு 8 என்னும் ஷடாஷ்டக யோகம் உருவாகிறது. செவ்வாய் இந்த கடக ராசியில் ஜூலை 01 ஆம் தேதி வரை இருப்பார். இதனால் இந்த ஷடாஷ்டக யோகத்தின் தாக்கம் ஜூலை மாதம் வரை இருக்கும்.
சனி செவ்வாயால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு மோசமான மற்றும் பல பிரச்சனைகளை தரக்கூடும். இப்போது எந்த ராசிக்காரர்கள் ஷடாஷ்டக யோகத்தால் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகமானது மிகவும் தீங்கு விளைவிக்கும். ஏனென்றால் செவ்வாய் மிதுன ராசியில் 2 ஆவது வீட்டிற்கு செல்கிறார் .இதனால் இக்காலத்தில் பண இழப்பிற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். பேசும் போது வார்த்தைகளை கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால், அதுவே பல பிரச்சனைகளை வரவழைத்துவிடும். முதலீடு செய்ய நினைத்தால், அதை தவிர்ப்பது நல்லது. இந்த யோகத்தால் குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சொத்து பிரச்சனைகளும் வரலாம். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
சிம்மம்
ஷடாஷ்டக யோகத்தால் சிம்ம ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய் 12 ஆம் வீட்டில் இருப்பதால், செலவுகள் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகளை சந்திக்க நேரிடும். தேவையில்லாத பிரச்சனைகளை இக்காலத்தில் சந்திக்க நேரிடும். இக்கால கட்டத்தில் தேவையில்லாமல் பயணம் செய்ய வேண்டியிருக்கும். மன உளைச்சல் அதிகரிக்கும். உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அதே சமயம் உங்கள் ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கும் ஷடாஷ்டக யோகமானது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்வதால், இக்காலத்தில் எதிரிகளிடம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். உடல்நல பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளளது. அதிலும் ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் இக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்கவாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications