Latest Updates
-
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க..
சனி-செவ்வாய் உருவாக்கும் சமசப்தம யோகம்: ஜூலை 01 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Saturn Mars Make Samsaptak Yoga 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றத்தின் போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். இப்படி உருவாகும் யோகங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அந்த வகையில் சனி பகவான் தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசிக்கு 30 ஆண்டுகளுக்கு பின் நுழைந்துள்ளார். தற்போது சனி பகவான் வக்ர நிலையில் கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் தைரியம் மற்றும் வீரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் செவ்வாய் ஜூலை 01 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைகிறார். இந்த செவ்வாய் பெயர்ச்சியால் சனி மற்றும் செவ்வாயின் நிலையால் சமசப்தம யோகம் உருவாகிறது.
இந்த யோகமான சனி மற்றும் செவ்வாய் நேருக்கு நேர் இருக்கும் போது உருவாகும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோக காலத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த ராசிக்காரர்களின் கஷ்டங்கள், பிரச்சனைகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
சமசப்தம யோகத்தால் கடக ராசிக்காரர்களின் கஷ்டங்கள் அதிகரிக்கப் போகிறது. இக்காலத்தில் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் உங்கள் தாயுடனான உறவு மோசமடையக்கூடும்.
மேலும் இக்காலத்தில் உங்கள் தாயுடனான உறவு மோசமடையும் வாய்ப்புள்ளது. மேலும் இக்காலத்தில் எந்த ஒரு புதிய வேலைகளைத் தொடங்குவதையும் தவிர்க்க வேண்டும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. ஹோட்டல் உணவுகளை அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சமசப்தம யோகமானது மோசமான பலன்களை வழங்கும். முக்கியமாக இக்காலத்தில் செலவுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் பண பிரச்சனைகளால் சிரமப்பட வேண்டியிருக்கும். இக்காலத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் சண்டை வர வாய்ப்புள்ளது.
எனவே யாருடனும் இக்காலத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலம் சற்று மந்தமாக இருக்கும்.
மேஷம்
சமசப்தம யோகமானது மேஷ ராசிக்காரர்களுக்கு பல பிரச்சனைகளை கொண்டு வரும். இந்த யோக காலத்தில் பணத்தை முதலீடு செய்வதாக இருந்தால், அதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், பண இழப்பை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வயிறு தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும்.
இக்காலத்தில் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். காதலிப்பவர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் பயணம் மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. ஒருவேளை பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டால், உங்கள் உடைமைகளை கவனமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications