Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? பூமியின் எல்லைக்கு அப்பால் என்ன உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும்
30 ஆண்டுகளுக்கு பின் சனி, செவ்வாய் உருவாக்கும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிக்கு பணமழை பொழியப்போகுது!
ஜோதிடத்தில் பல வகையான யோகங்கள் உருவாவதுண்டு. அதில் ஒன்று தான் நவபஞ்சம் யோகம். அந்த வகையில் இந்த யோகமானது 30 ஆண்டுகளுக்கு பின் சனி மற்றும் செவ்வாயின் நிலைகளால் உருவாகிறது.
Saturn Mars Made Navpancham Yoga After 30 Years: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்க்கைகள் மற்றும் நிலைகளால் பல வகையான யோகங்கள் உருவாவதுண்டு. அதில் ஒன்று தான் நவபஞ்சம யோகம். அந்த வகையில் இந்த யோகமானது 30 ஆண்டுகளுக்கு பின் சனி மற்றும் செவ்வாயின் நிலைகளால் உருவாகிறது.
அதில் சனிக்கு பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாயும், செவ்வாய்க்கு 9 ஆவது ஸ்தானத்தில் சனி இருப்பதால், நவபஞ்சம் யோகம் உருவாகிறது. இந்த யோகமானது மே 10 ஆம் தேதி வரை இருக்கும்.

இந்த நவ பஞ்சம யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் அட்டகாசமான பலன்களைப் பெறவுள்ளார்கள். அதுவும் இந்த ராசிக்காரர்கள் திடீர் பண வரவால் தங்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பதோடு, பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல உயர்வைக் காண்பார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நவ பஞ்சம் யோகமானது மங்களகரமானதாக இருக்கும். நல்ல பண வரவு கிடைக்கும். தைரியம் அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வரும். வாழ்க்கைத் துணையால் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை செய்து கொண்டிருப்பவர்கள் பதவி உயர்வை பெற வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மொத்தத்தில் இக்காலத்தில் பெயர், புகழ் அதிகரிக்கும் வாய்ப்புள்ளன.

மிதுனம்
நவபஞ்சம் யோகமானது மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். குறிப்பாக இந்த ராசிக்காரர்களைத் தேடி பணம் அதிகமாக வரும். நீதிமன்ற வழக்குகுளில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து எதிர்பாராத லாபம் கிடைக்கும். மேலும் நிலம், வீடு வாங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும். உங்களின் நீண்ட கால ஆசைகள் இக்காலத்தில் நிறைவேறும். புதிய வேலையைத் தொடங்க நினைத்திருந்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நவபஞ்சம யோக காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் செய்பவர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைக் காண்பார்கள். வாகனம் மற்றும் வீடு வாங்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
உங்கள் வாழ்க்கைத் துணையும் அவரது தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பார். கூட்டு தொழில் செய்து வருபவர்களுக்கு இக்காலத்தில் நல்ல சிறப்பான பலன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications