Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சனி செவ்வாய் சேர்க்கையால் மார்ச் 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜொலிக்கப் போகுது...
Saturn Mars Conjunction On 15 March 2024: நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் 2023 ஆம் ஆண்டு முதலாக பயணித்து வருகிறார். இந்த கும்ப ராசியில் சனி பகவான் 2025 ஆம் ஆண்டு வரை பயணிக்கவுள்ளார்.
அதே சமயம் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த செவ்வாய் வருகிற மார்ச் 15 ஆம் தேதி சனி பகவானின் ராசியான கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார்.

ஏற்கனவே கும்ப ராசியில் சனி பகவான் பயணித்து வருவதால், செவ்வாய் பெயர்ச்சிக்கு பின் சனி செவ்வாய் சேர்க்கையானது கும்ப ராசியில் நிகழவுள்ளது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு இச்சேர்க்கை அதிர்ஷ்டத்தை வழங்கவுள்ளது. அதுவும் 30 ஆண்டுகளுக்கு பின் இந்த கிரக சேர்க்கைகள் நிகழவுள்ளதால், எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதை இப்போது காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். இந்த சேர்க்கை காலத்தில் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தில் நல்ல பலனைத் தருவதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், செய்யும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலர் எதிர்பாராத பண ஆதாயங்களைப் பெறுவார்கள். குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள. வணிகர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் சனி செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். வேலையை மாற்ற நினைத்தால், இக்காலத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இக்காலத்தில் வணிகர்கள் முதலீடுகளை செய்தால் எதிர்காலத்தில் பல மடங்கு லாபத்தைப் பெறலாம். வெளிநாட்டில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் இருப்பவர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நல்ல லாபத்துடன் முன்னேற்றத்தையும் காண்பார்கள். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி நிலையில் எதிர்பாராத அளவில் முன்னேற்றம் ஏற்படும். மொத்தத்தில் சனி செவ்வாய் சேர்க்கையால் நிறைய பணத்தை சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications