Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை
30 ஆண்டுகளுக்கு பின் 2024-ல் நிகழும் சனி செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு பணக்காரராகும் யோகம் இருக்கு...
Saturn Mars Conjunction In 2024 After 30 Years: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொரு மாதமும் தங்களின் நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும். சில கிரகங்கள் நிலைகளை மாற்றுவதற்கு பல மாதங்கள்/ஆண்டுகள் ஆகும்.
இப்படி கிரகங்கள் நிலைகளை மாற்றும் போது, சில சமயங்களில் ஒருசில கிரகங்களின் சேர்க்கை பல ஆண்டுகளுக்கு பின் நிகழும். அந்த வகையில் நீதிமான் சனி பகவானும், கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாயும் 30 ஆண்டுகளுக்கு பின் 2024-ல் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர்.

இப்படியான சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கையானது பணக்காரராகும் யோகத்தை வழங்கும். அதோடு வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும். இப்போது 30 ஆண்டுகளுக்கு பின் 2024-ல் நிகழும் சனி செவ்வாய் சேர்க்கையால் பணக்காரராகும் யோகம் கொண்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
சனி பகவானும், செவ்வாயும் இணைந்து பயணிக்கும் காலமானது மிதுன ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை வழங்கும். முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் இந்த காலகட்டத்தில் நிறைவேறும். மனதில் நினைத்த காரியங்கள் சரியான நேரத்தில் முடிவடையும்.
வேலையை மாற்ற நினைத்தால் அல்லது வேலையை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பாராத பண வரவு கிடைக்கும். தடைபட்ட வேலைகள் மீண்டும் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு முடிக்கப்படும். மொத்தத்தில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் மற்றும் நிதி நிலை உயரும்.
துலாம்
சனி மற்றும் செவ்வாயின் சேர்க்கையானது துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். தொழில் மற்றும் நிதி நிலையில் எதிர்பாராத அளவில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
கடினமான வேலைகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். நீண்ட காலமாக திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு, இக்காலத்தில் நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். மேலும் தற்போது இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடந்து வருகிறது. ஆயினும் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை காலத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். சிலர் சாதனைகளைப் புரியலாம்.
சனியும், செவ்வாயும் இணைந்து பயணிப்பதால் சமூக வட்டம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி நிச்சயம் கிடைக்கும். ஒரு வேலை உங்களுக்கு பொருந்தாவிட்டால், அதை கைவிட்டு புதிய வேலையை நோக்கி சென்றால், நல்ல பலனைப் பெறலாம்.
சனியின் ஆதிக்கம் நிறைந்த 2024
2024 ஆம் ஆண்டில் சனி பகவானின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். அதோடு சந்திரனும், ராகுவும் அதிக செல்வாக்கைக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் நியூமராலஜியின் படி, 2024 ஆம் ஆண்டின் கூட்டுத் தொகை 8 ஆகும். இதில் எண் 8-ன் அதிபதி சனி. அதேப் போல் எண் 2-ன் அதிபதி சந்திரன் மற்றும் எண் 4-ன் அதிபதி ராகு. இதனால் 2024 ஆம் ஆண்டில் சனி, ராகு, சந்திரனின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். இதன் விளைவாக சுப அல்லது அசுப பலன்களைப் பெறலாம். இந்த பலன்கள் அனைத்தும் ஒருவரது செயல்களைப் பொறுத்தது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications