Latest Updates
-
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும
30 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் நிகழும் திரிகிரக யோகம்: மார்ச் மாதம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கபோகுது
Saturn, Mars And Venus Conjunction 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது, ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கைகள் நிகழும். அதுவும் மூன்று கிரக சேர்க்கைகளால் திரிகிரக யோகமும் 4 கிரக சேர்க்கைகளால் சதுர்கிரக யோகமும் உருவாகக்கூடும். அப்படி உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் தற்போது சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 15 ஆம் தேதி செவ்வாய் கும்ப ராசிக்கும், மார்ச் 7 ஆம் தேதி சுக்கிரன் கும்ப ராசிக்கும் செல்லவுள்ளனர். இப்படி கும்ப ராசியில் இவ்விரு கிரகங்களும் நுழைவதால், கும்ப ராசியில் சனி, செவ்வாய், சுக்கிரனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.

இந்த 3 மூன்று கிரகங்களின் சேர்க்கை 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசியில் நிகழ்வதால், இந்த யோகம் சற்று சிறப்பானதாக இருக்கும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும் 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். நிதி வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஆளுமை மேம்படும். இக்காலத்தில் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். திருமணமாகாதவர்கள் இக்காலத்தில் நல்ல வரனைப் பெற வாய்ப்புள்ளது.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகம் வருமானம் மற்றும் லாபத்தின் வீட்டில் உருவாகவுள்ளதால், இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்தால், அதில் நல்ல லாபம் கிடைக்கும். இக்காலத்தில் புதிய வேலையை தொடங்கினால் நல்ல வளர்ச்சியைக் காணலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலத்தில் வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். தந்தையுடனான உறவு நன்றாக இருக்கும். வணிகர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications