Latest Updates
-
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும்
சனி, கேது உருவாக்கிய ஷடாஷ்டக யோகம்: 2024 வரை இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் ஜாக்கிரதையா இருக்கணும்...
Saturn Ketu Made Shadashtak Yoga: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது சில சமயங்களில் கிரக சேர்க்கைகள் மற்றும் அந்த கிரகங்கள் இருக்கும் வீடுகளினால் சில சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். இப்படி உருவாகும் யோகங்கள் ஒவ்வொன்றும் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும்.
அந்த வகையில் சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதே வேளையில் கேது பகவான் கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இதனால் ஷடாஷ்டக யோகம் உருவாகியுள்ளது. ஜாதகத்தில் 6 மற்றும் 8 ஆம் வீட்டில் சனியும், கேதுவும் இருக்கும் போது தான் இந்த யோகம் உருவாகிறது.

ஷடாஷ்டக யோகம் ஒரு அசுப யோகம். இந்த யோகத்தால் 2024 ஆம் ஆண்டு வரை சில ராசிக்காரர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இப்போது ஷடாஷ்டக யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ரிஷபம்
ஷடாஷ்டக யோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் நிறைய ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். உடல் ரீதியான பிரச்சனைகளை மட்டுமின்றி, மன ரீதியான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். முதலீடுகளை செய்வதாக இருந்தால், கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் உங்கள் பேச்சு உறவுகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
விருச்சிகம்
சனி கேதுவால் உருவான ஷடாஷ்டக யோகமானது விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை கொண்டு வரும். முக்கியமாக எந்த ஒரு விவாதத்திலும் ஈடுபடாரீர்கள். சிலர் தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். உங்களின் முக்கியமான வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று ஜாக்கிரதையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
ஷடாஷ்டக யோகத்தால் மீன ராசிக்காரர்கள் 2024 ஆம் ஆண்டு வரை சற்று கவனமாக இருக்க வேண்டும். சிலர் நிறைய ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். நீதிமன்ற வழக்குகளில் தோல்வியை சந்திக்க நேரிடும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. குடும்பத்தில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால் குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் போது கவனமாக இருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications