Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
சனி பகவானின் ஆசியால் 2025 வரை இந்த 3 ராசிக்கு தொழில் சிறக்கும்.. செல்வம் குவியும்.. உங்க ராசியும் இதுல இருக்கா
Saturn In Aquarius Till 2025: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவரது கர்மங்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடிய நீதிமான் தான் சனி பகவான். இந்த சனி ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை பயணிப்பார். இவர் கும்பம் மற்றும் மகர ராசிகளின் அதிபதியாவார்.
சனி பகவான் தற்போது தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசிக்கு இவர் 2023 ஆம் ஆண்டில் நுழைந்தார். இந்த ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை இருப்பார். கும்ப ராசியில் சனி பகவான் இருக்கும் வரை சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.

தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகிறது மற்றும் செல்வமும் குவியப் போகிறது. இப்போது கும்ப ராசியில் சனி இருக்கும் வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி பகவான் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிதி நன்மைகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட வருமான ஆதாரங்கள் உருவாகலாம். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவார்கள். பேச்சால் பல காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். ஆனால் கோபத்தை மட்டும் கட்டுப்படுத்த வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி பகவான் உள்ளார். அதிர்ஷ்ட வீட்டில் சனி பகவான் இருப்பதால், 2025 வரை இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இக்காலகட்டத்தில் நிறைவேறும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி பகவான் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். 2025 வரை நிதி நிலையானது மிகவும் சிறப்பாக இருக்கும். உங்களின் இலக்குகளை அடைய கடினமாக உழைப்பீர்கள். அந்த கடின உழைப்புக்கு ஏற்ற பலனும் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமைந்து, திருமணம் நடக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications