Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சனி பகவானால் 2024-ல் இந்த 3 ராசிக்காரங்க நிறைய பிரச்சனைகளை சந்திக்கப் போறாங்க... கவனமா இருங்க..
Saturn In Aquarius 2024: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கருதப்படுகிறார். சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். இப்படி இரண்டரை ஆண்டுகள் இருப்பதால், சனியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே சற்று அதிகமாக இருக்கும்.
அதுவும் ஏழரை சனி, அஷ்டம மற்றும் அர்த்தாஷ்டம சனியால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் மோசமான பலன்களைப் பெறக்கூடும். குறிப்பாக நிதி நிலை, ஆரோக்கியம் போன்றவற்றில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

அந்த வகையில் இன்னும் சில நாட்களில் 2024 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் கும்ப ராசியில் பயணிக்கவுள்ளார். சொல்லபோனால் 2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசியில் தான் இருப்பார்.
கும்ப ராசியில் சனி பகவான் இருப்பதால், சில ராசிக்காரர்கள் 2024 ஆம் ஆண்டில் மோசமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி பகவான் உள்ளார். இதனால் 2024 ஆம் ஆண்டில் இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குழப்பமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்நிலையில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அதோடு பழைய நோய்கள் மீண்டும் இந்த ஆண்டில் தலைத்தூக்கும் வாய்ப்புள்ளதால், கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க யோகா, தியானம், உடற்பயிற்சி போன்றவற்றில் தினமும் ஈடுபடுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி பகவான் உள்ளார். இதனால் 2024 ஆம் ஆண்டு இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்காது. ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும். முக்கியமாக கால் மற்றும் முதுகுவலியால் அதிகம் அவதிப்பட வேண்டியிருக்கும்.
தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். முக்கியமாக நிறைய மருத்துவ செலவுகளை சந்திப்பீர்கள். உண்ணும் உணவில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. அதோடு சுறுசுறுப்பாக இருக்க முயற்சிக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி பகவான் உள்ளார். அதுவும் ஏழரை சனி நடந்து கொண்டிருப்பதால், 2024 ஆம் ஆண்டில் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். வசதிகள் சற்று குறையக்கூடும். தேவையற்ற செலவுகளை அதிகமாக சந்திக்க வேண்டியிருக்கும்.
மே மாதத்திற்கு பின் நிலைமை கொஞ்சம் சரியாகலாம். இருப்பினும் சில காரணங்களால் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். இந்த மன அழுத்தத்தைத் தவிர்க்க யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications