Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
30 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் பயணிக்கும் சனி: 2025 வரை இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்..
Saturn In Aquarius 2023: நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாகும். இவர் ராசியை மாற்றுவதற்கு இரண்டரை ஆண்டுகள் ஆகும். கிரகங்களிலேயே சனி பகவான் மெதுவாக நகர்வதால், இவர் ராசியை மாற்றும் போது அதன் தாக்கமானது சற்று அதிகமாக இருக்கும். இந்த சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார்.
இந்த சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் தனது சொந்த ராசியான கும்ப ராசிக்குள் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நுழைந்தார். இந்த கும்ப ராசியில் சனி பகவான் 2025 ஆம் ஆண்டு வரை பயணிப்பார். இதனால் கும்ப ராசியில் பயணிக்கும் சனியின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக கும்ப ராசியில் சனி பகவான் இருப்பதால் 3 ராசிக்காரர்களுக்கு 2025ஆம் ஆண்டு வரை தொழிலில் நல்ல லாபமும், முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி பகவான் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் செல்வ நிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பழைய முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வரன் அமையும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். ஆனால் இக்காலத்தில் கோபம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏற்கனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி பகவான் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் 2025 வரை நேர்மையாகவும், கடினமாகவும் உழைத்து வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். புதிய வேலையை இக்காலத்தில் தொடங்கினால், அந்த வேலை வெற்றிகரமாக நடக்கும்.
அதுவும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். நல்ல வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வெளிநாடு செல்லும் எண்ணம் இருந்தால், சனியின் அருளால் அதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி பகவான் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு 2025 வரை சிறப்பாக இருக்கும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக, இந்த ராசிக்காரர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











