Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
30 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடையும் சனி: இந்த 3 ராசிகளின் செல்வம் உயரப் போகுது..
Saturn Direct In Aquarius On 04 November 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, சில சமயங்களில் வக்ர நிலையிலும் பயணிக்கும். அப்படி கிரகங்களின் இயக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் நீதிமான் சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்கு பின் நுழைந்து பயணித்து வருகிறார். அதுவும் வக்ர நிலையில் தற்போது பயணித்து வருகிறார். கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும் போது பலவீனமாகவும், அதனால் கிடைக்கும் நன்மைகளும் தடைபடும். இந்நிலையில் சனி பகவான் நவம்பர் 04 ஆம் தேதி கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவுள்ளார்.

இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த சனி வக்ர நிவர்த்தியால் நன்மைகளைப் பெறவுள்ளார்கள். குறிப்பாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறவுள்ளது. அதோடு திடீர் பண வரவும், தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படவுள்ளது. சனி வக்ர நிவர்த்தி அடைந்த பின், உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும்.
சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவீர்கள். உங்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலையின்றி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவான் நற்பலனை வாரி வழங்கவுள்ளார். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நவம்பர் முதல் உங்கள் எதிரிகளை வீழ்த்தி வெற்றி காண்பீர்கள்.
நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். மேலும் இந்த ராசிக்கார்களை திருமணம் செய்தவர்களும் வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். சனி பகவான் சச ராஜயோகத்தை உருவாக்கியிருப்பதால், வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். கடனை முழுமையாக அடைப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல நன்மைகளைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசை சனி பகவானின் அருளால் நிறைவேறும்.
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் நவம்பர் 04 ஆம் தேதிக்கு பின் கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழில் செய்பவர்களுக்கு நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். முக்கியமாக மாணவர்கள் நவம்பர் முதலாக படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications