Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
30 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் வக்ர நிவர்த்தியடையும் சனி: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும்..
Saturn Direct In Aquarius 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். சனி பகவான் ஒருவரது நல்ல மற்றும் கெட்ட செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர். இந்த சனி பகவான் ராசியை மாற்றுவதற்கு 2 1/2 ஆண்டுகள் ஆகும்.
அந்த வகையில் சனி பகவான் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசிக்குள் 2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்தார். அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் கும்ப ராசியில் வக்ரமானார். இந்நிலையில் நவம்பர் 04 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். அதாவது, நேர்பாதையில் பயணிக்கவுள்ளார்.

சனி பகவான் வக்ரமாக இருந்ததால், சில ராசிக்காரர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்திருப்பார்கள். ஆனால் வக்ர நிவர்த்தி அடையவுள்ளதால், இதுவரை பிரச்சனைகளை சந்தித்து வந்த ராசிக்காரர்கள் அப்பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, தொழிலில் நல்ல வெற்றியைக் காணப் போகிறார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் தொழிலில் பிரச்சனைகளை சந்தித்து வந்தவர்கள், அப்பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு வெற்றி பெறத் தொடங்குவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். முக்கியமாக நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும்.
மகரம்
மகர ராசியின் அதிபதி சனி பகவான் இந்த சனி பகவான் 12 ஆவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. இக்காலத்தில் மேற்கொள்ளும் திட்டங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். கடின உழைப்பிற்கான நல்ல பலன் கிடைக்கும். லட்சியங்கள் நிறைவேறும். பேச்சால் பல காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை சிரமத்தை சந்தித்தவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் மேம்படும். இதன் காரணமாக நல்ல பாராட்டைப் பெறக்கூடும். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு, நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications