Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
சனி வக்ர நிவர்த்தியடைவதால் 2025 வரை இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் வைரம் போல ஜொலிக்க போகுது...
Saturn Direct In Aquarius 2023: ஜோதிடத்தின் படி, கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் சனி பகவான். இந்த சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டுகள் ஆகும். மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியான சனி பகவான், 2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசிக்குள் நுழைந்தார்.
30 ஆண்டுகளுக்கு பின் சனி பகவான் கும்ப ராசியில் நுழைந்திருப்பதால், இந்த சனிப் பெயர்ச்சி இன்னமும் சிறப்பு வாய்ந்தது. கும்ப ராசியில் நுழைந்த சனி பகவான் ஜூன் மாதம் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கினார். இந்நிலையில் நவம்பர் மாதத்தில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவுள்ளார்.

சனி பகவான் இந்த கும்ப ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை இருக்கப் போகிறார். இதனால் நவம்பர் 04 முதல் 2025 ஆம் ஆண்டு வரை சனி பகவானின் அருளால் ஒருசில ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி பகவான் பயணித்து வருகிறார். கும்பத்தில் பயணிக்கும் சனி பகவான் சச ராஜயோகத்தை உருவாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய நிலையில் உள்ளவர்களுடன் நட்பு கிடைக்கும்.
வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும் பெறுவார்கள். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கூட்டு வணிகர்கள் நல்ல வெற்றியைக் காண்பார்கள். சனி பகவானின் அருளால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி பகவான் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். படித்து முடித்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு எதிர்பார்த்த வரன் தேடி வரும். காதல் உறவுகளில் வெற்றி கிடைக்கும். காதலிப்பவர்கள் திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளது. பங்குச் சந்தை, லாட்டரியில் இருந்து எதிர்பாராத அளவில் பணத்தைப் பெறக்கூடும். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களைப் பெறக்கூடும். பரம்பரை சொத்துக்களால் நன்மைகள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி பகவான் உள்ளார். இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு 2025 வரை ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் வேலைகளில் வெற்றி கிடைக்கும், பாராட்டு மழையில் நனைவீர்கள். அலுவலக சூழல் சாதகமாக இருக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். வெளிநாடு செல்லவும் வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











