Latest Updates
-
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
சனி பகவானின் அருளால் 2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதம் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது..
Saturn Direct 2023: நவகிரகங்களில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் சூரிய பகவானின் மகனாவார். ஜோதிடத்தில் சனி மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம். சனி ராசியை மாற்றுவதற்கு 2 1/2 ஆண்டுகள் ஆகும். இதனால் சனி பகவானின் ராசி மாற்றத்தில் ஏற்படும் தாக்கமானது மனித வாழ்க்கையில் சற்று அதிகமாக இருக்கும்.
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் கும்ப ராசியில் நுழைந்தார். கும்ப ராசியானது சனி பகவானின் மூலதிரிகோண ராசியாகும். 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசியில் நுழைந்துள்ள சனி பகவான் ஜூன் மாதத்தில் வக்ரமானார். இந்நிலையில் நவம்பர் 04 ஆம் தேதி சனி வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக சனி வக்ர நிவர்த்தி அடைவதால் 2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்கள் மிகவும் சிறப்பாக இருக்கவுள்ளது. சொல்லப்போனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் வாழ்க்கையே பிரகாசமாக இருக்கப் போகிறது. இப்போது சனி பகவானின் அருளால் அதிஷ்டம் பெறும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் நவம்பர் 04 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். குறிப்பாக 2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்கள் அதிர்ஷ்டமானதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் பல வெற்றிகளை காண்பீர்கள்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறக்கூடும். நீண்ட நாள் ஆசைகள் இக்காலகட்டத்தில் நிறைவேறும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். புதிய வாகனம், சொத்துக்களை வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்கள் சிறப்பாக இருக்கும். ஏனெனில் சனி பகவான் ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் இருப்பார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். முக்கியமாக இக்காலத்தில் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும்.
முக்கிய வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் 2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்கள் கும்ப ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். அதோடு சச ராஜயோகத்தையும் உருவாக்கியுள்ளார். எனவே இந்த ராசிக்காரர்களின் ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சமூகத்தில் மிகவும் பிரபலமாவீர்கள். முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் சில முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும். கூட்டு வேலை செய்பவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications