Latest Updates
-
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா?
சனி பகவானின் அருளால் தீபாவளிக்கு முன்னரே இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது..
Sani Vakra Nivarthi 2023: நவகிரகங்களில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர் தான் சனி பகவான். அதே சமயம் சனி பகவான் ஆண்டியையும் அரசனாக்கக்கூடியவர். இதெல்லாம் ஒருவரது செயல்களைப் பொறுத்தது. இப்படிப்பட்ட சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர்.
மேலும் இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். தற்போது சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சனி பகவான் நவம்பர் 04 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து கும்ப ராசியில் பயணிக்கவுள்ளார்.

இந்த நிகழ்வானது தீபாவளிக்கு முன்னரே நிகழ்வதால், இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் சனி பகவானின் அருளால் 3 ராசிக்காரர்கள் தீபாவளிக்கு முன்னரே நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தையும் வியாபாரத்தில் நல்ல லாபத்தையும், அதிர்ஷ்டத்தின் ஆதரவையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவார்கள். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். கூட்டு வேலையைத் தொடங்கினால், அதில் நல்ல பலன்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தை தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல பண ஆதாயமும் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கலாம். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். உங்களின் வேலைகள் நல்ல பாராட்டைப் பெறும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அப்போது சமூகத்தில் உயர் நிலையில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும்.
முக்கியமாக திடீர் பண வரவு கிடைக்கும். சனி பகவானின் அருளால் எதிரிகளை தோற்கடிக்கும் திறன் அதிகரிக்கும். சிலருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். தைரியமும், துணிச்சலும் அதிகமாக இருக்கும். புதிய முதலீடுகளால் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் ஊடகத் துறை மற்றும் தகவல் தொடர்பு துறையில் இருப்பவர்கள் நல்ல புகழைப் பெறுவார்கள். அறிவுத்திறனால் பல பெரிய இலக்குகளை அடைவீர்கள். காதல் உறவுகள் வலுவடையும். காதலிப்பவர்கள் தங்கள் காதலரை வீட்டில் உள்ளோரிடம் அறிமுகம் செய்யலாம்.
திருமணமானவர்களுக்கு தங்கள் துணையுடனான பிணைப்பு அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் நல்ல வருமானத்தைப் பெறுவார்கள். தந்தையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். அதனால் பல காரியங்களை சாதிப்பீர்கள். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications