Latest Updates
-
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது!
30 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: இந்த 3 ராசிக்கு பண இழப்பு ஏற்படலாம்..
Sani Vakra Nivarthi 2023: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். அதோடு இவர் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர். சனி பகவான் ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் வரை பயணிப்பார் மற்றும் இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார்.
சனி பகவானின் இயக்கத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், அது ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவான் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசிக்குள் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நுழைந்தார்.

ஜூன் மாதத்தில் கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கினார். இந்நிலையில் தீபாவளிக்கு முன், அதாவது நவம்பர் 04 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். சனி வக்ர நிவர்த்தி அடைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
சொல்லப்போனால் இனி 2025 வரை சனி பகவான் கும்ப ராசியில் தான் பயணிக்கவுள்ளார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருந்தாலும், இன்னும் சில ராசிக்காரர்கள் பலவிதமான கஷ்டங்களை சந்திக்க நேரிடும். இப்போது சனி வக்ர நிவர்த்தி அடைவதால் எந்த ராசிக்காரர்கள் கஷ்டங்களை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் கவலைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் பல பிரச்சனைகள் வரக்கூடும். அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். சிலர் வேலையை மாற்ற நினைக்கலாம்.
வியாபாரிகள் சில பிரச்சனைகளை சந்திப்பார்கள். சிலருக்கு பண இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இக்காலத்தில் எந்த ஒரு முதலீடுகளை செய்வதையும் தவிர்க்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அடிக்கடி நோய்வாய்ப்படக்கூடும்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நவம்பர் முதல் எந்த ஒரு வெற்றியையும், லாபத்தையும் பெற மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பணிபுரிபவர்கள் சிறிது அழுத்தத்தை சந்திக்க நேரிடும். சிலர் வேலையை மாற்ற நினைக்கலாம்.
வியாபாரிகள் சற்று கவனமாக இருக்க வேண்டும். எதிரிகள் இக்காலத்தில் சற்று வலிமையானவர்களாக இருப்பார்கள். இதனால் சில இழப்புக்களை அல்லது நஷ்டத்தை சந்திக்க நேரிடும். நிதி நிலை மோசமாக பாதிக்கப்படும். தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடும். தொழில், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒவ்வொரு வேலையிலும் தாமதம் ஏற்படுவதால் மன உளைச்சலுக்கு ஆளக்கூடும். வேலையை மாற்ற நினைப்பவர்கள் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்.
வியாபாரிகளுக்கு சற்று மந்தமாகவே இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளருடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்கலாம். நிதி ரிதியாக, பண இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். தேவையற்ற செலவுகள் உங்களை சிரமப்படுத்தும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். அதோடு குடும்ப பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications