Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
2024-ல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் அருளால் பணக்காரராகும் வாய்ப்பிருக்கு...
Sani Vakra Nivarthi 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, நீதியின் கடவுளாக சனி பகவான் கருதப்படுகிறார். ஏனெனில் சனி பகவான் பராபட்சன்றி ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்கக்கூடியவர்.
நவகிரகங்களில் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர் தான் சனி பகவான். சனி பகவான் தற்போது தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் வக்ர நிலையில் சனி பகவான் பயணித்து வருகிறார்.

கிரகங்கள் வக்ரமாகும் போது, அதனால் கிடைக்கவிருக்கும் பலன்களில் சற்று தாமதம் ஏற்படும். இந்நிலையில் சனி பகவான் நவம்பர் 04 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து, கும்ப ராசியில் நேர் பாதையில் பயணிக்கவுள்ளார். இதனால் நவம்பர் முதல் 2024 ஆம் ஆண்டு வரை சனி பகவானின் அருளால் சில ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்புள்ளது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நவம்பர் 04 முதல் சனி பகவானின் அருளால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
வெளியூர் அல்லது வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக லாபத்தைப் பெறக்கூடும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். சிலர் பதவி உயர்வைப் பெறலாம். சனி பகவானின் பரிபூர்ண அருளால் நிதி நிலையில் உயர்வு ஏற்படும். சொத்துக்களை வாங்க வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நவம்பர் முதல் சனிபகவானின் அருளால் நல்ல நிதி ஆதாயத்தைப் பெறுவார்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். தொழில் ரீதியாக சனியின் அருளால் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பதவி உயர்வையும் பெறலாம். திடீரென்று பண வரவு அதிகரிக்கும். வியாபாரிகள் சனியின் ஆசியால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சனி பகவானின் பரிபூர்ண ஆசியால் நவம்பர் முதல் நல்ல பலனைப் பெறுவார்கள். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய கார் அல்லது வீடு வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது.
நவம்பருக்கு பின் துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். அனைத்து வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். கடின உழைப்பிற்கான முழு பலனைப் பெறக்கூடும். திடீர் பண ஆதாயம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சட்ட பிரச்சனைகள் தீரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











