Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சனி பகவானின் பார்வையால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
ஜோதிடத்தின் படி, சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார். அதில் ஒருவர் நல்ல செயல்களை செய்தால், அவர்களுக்கு நற்பலனையும், கெடுதலை செய்தால், கெடு பலன்களையும் வழங்குவார். ஒருவரது ஜாதகத்தில் சனி பகவானின் சுப பார்வை விழுந்தால், அந்நபர் செல்வந்தராகும் வாய்ப்புள்ளது. அதுவே சனியின் அசுப பார்வை விழுந்தால், அது அவரது வாழ்க்கை நரகமாக்கிவிடும்.
தற்போது சனி பகவான் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரனின் ஏழாம் பார்வை விருச்சிக ராசியில் உள்ளது மற்றும் சனியின் 10 ஆவது பார்வையால் சில ராசிக்காரர்கள் அபரிமிதமான நற்பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது சனியின் அருளால் நற்பலன்களைப் பெறவுள்ள ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
சனியின் 10 ஆம் பார்வையால் ரிஷப ராசிக்காரர்கள் நற்பலன்களைப் பெறுவார்கள். எந்த வேலை செய்தாலும், அதில் வெற்றி காண்பார்கள். திருமண வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சி நிறைந்தும் இருக்கும். வணிகம் செய்பவர்கள், அதுவும் கூட்டு தொழில் செய்பவர்கள், நல்ல லாபத்தைப் பெறலாம். பணிபுரிபவர்கள் சம்பள உயர்வையும், பதவி உயர்வையும் பெற வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சனியின் 10 ஆம் பார்வையால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். இந்த காலத்தில் முன்பை விட தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரிகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கலை துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். இதுவரை சந்தித்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி, உடல் நலம் சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களின் இலக்குகளை எளிதில் அடைவார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களின் சனியின் 10 ஆம் பார்வையானது நற்பலன்களை வாரி வழங்கும். கும்பம் சனி பகவானின் சொந்த ராசி என்பதால், வியாபாரம் செய்யும் கும்ப ராசிக்காரர்கள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதுவரை சந்தித்து வந்த பண பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications