Latest Updates
-
லன்ச்பாக்ஸ்-க்கு ஒருடைம் இப்படி கீரை சாதம் செஞ்சு குடுங்க.. ருசியாவும் இருக்கும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 01 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு நல்ல நேரம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
சனி, சூரியனால் உருவான சமசப்தம யோகம்: அக்டோபர் 17 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..
Samsaptak Yoga On August 2023: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதுவும் கிரகங்களின் இயக்கங்களின் போது, சில சமயங்களில் கிரக சேர்க்கைகள் மற்றும் கிரகங்களின் நிலைகளால் யோகங்கள் உருவாகும். அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஆகஸ்ட் 17 ஆம் தேதி தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழைந்தார்.

அதே சமயம் சனி தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இவ்விரு கிரகங்களும் நேருக்கு நேராக உள்ளன. இதன் விளைவாக சமசப்தம யோகம் உருவாகியுள்ளது.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த யோக காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். இப்போது சமசப்தம யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சமசப்தம யோகத்தால் சிம்ம ராசிக்காரர்கள் நிறைய ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் கோபம் மற்றும் ஆணவத்தின் உணர்வுகள் அதிகமாக இருக்கும். பேச்சை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது. இல்லாவிட்டால் வார்த்தைகள் தேவையற்ற சிக்கல்களை உருவாக்கும். சில விஷயங்களில் மன அழுத்தமும் ஏற்பட வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடன் சண்டைகள் ஏற்படலாம். பணிபுரிபவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கன்னி
சமசப்தம யோகமானது கன்னி ராசிக்காரர்களின் நிதி நிலையை மோசமாக்கும். எதிர்பாராத செலவுகளை சந்திக்க வைக்கும். கடன் வாங்கும் வாய்ப்புக்கள் உருவாகும். மிகுந்த பண பிரச்சனையை சந்திக்க நேரிடும். ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும். வேலைப்பளு அதிகரிக்கும் மற்றும் செயல்திறன் பாதிக்கப்படும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக வாய்ப்புள்ளது.
மகரம்
சமசப்தம யோகமானது மகர ராசிக்காரர்களை பலவிதமாக பாதிக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் விழிப்போடு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். நிதி நிலை மோசமாக பாதிக்கப்படும். குடும்ப பிரச்சனைகள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கும்பம்
சமசப்தம யோகமானது கும்ப ராசிக்காரர்களுக்க பல சிக்கல்களை உண்டாக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். காதல் வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருக்கும். நிதி இழப்புக்களை சந்திக்க நேரிடும். வேலைகள் இக்காலத்தில் திட்டமிட்டபடி நடக்காது. பயணம் மேற்கொள்ள திட்டமிட்டால், சற்று எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications