இந்த 5 ராசிக்காரங்க புண்படுத்துற மாதிரி பேசுறதையே வழக்கமாக வைச்சிருப்பாங்களாம்... உங்க ராசி என்ன?

நம் வாழ்க்கை முழுவதும் நாம் பலவிதமான மக்களை சந்திக்கிறோம். சிலர் அன்பானவர்களாகவும், சிலர் வெறுப்பை உமிழ்பவர்களாகவும் மற்றும் சிலர் முரட்டுத்தனமானவர்களாகவும் இருக்கலாம். முரட்டுத்தனம் என்பது காயப்படுத்தும் வார்த்தைகள் மற்றும் அவமானங்களைப் பற்றியது மட்டுமல்ல, அவர்களின் செயல்களிலும் இருக்கலாம்.

ஒருவர் வளர்க்கப்படும் விதம், நண்பர்கள் மற்றும் சூழ்நிலை போன்றவைதான் ஒருவரின் கண்ணியத்தை நிர்ணயிக்கிறது. ஒருவர் கண்ணியக்குறைவாகவும், முரட்டுத்தனமானாகவும் நடந்து கொள்வதற்கு அவர்களின் பிறந்த ராசி மிகவும் முக்கிய காரணாமாக இருக்கலாம். அதன்படி சில ராசிக்காரர்கள் இயல்பாகவே மிகவும் முரட்டுத்தனமாகவும் மற்றும் புண்படுத்தும் விதமாகவும் நடந்து கொள்வார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Rudest Zodiac Signs According to Astrology in Tamil

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் பேசுவதற்கு முன் ஒருபோதும் சிந்திக்க மாட்டார்கள். நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் மிகவும் கொடூரமான ராசிக்காரர்களில் ஒருவராக அவர்கள் நிச்சயம் இருப்பார்கள். தாங்கள் சொல்லப் போவது ஒருவரின் உணர்வுகளை உண்மையில் புண்படுத்தும் என்பதை அவர்கள் முழுமையாக அறிந்திருந்தாலும் அவர்கள் அதையே செய்வார்கள். மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் அதிகாரத்தில் இருக்க துடிப்பவர்கள், எனவே அவர்கள் தங்கள் விருப்பப்படி நடக்கவில்லை என்றால், அவர்கள் எதிரில் இருப்பவர்களை துன்புறுத்தும் படி பேசுவார்கள்.

கும்பம்
மற்றவர்களை காயப்படுத்துவதில் கும்ப ராசிக்காரர்கள் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள். கும்ப ராசிக்காரர்கள் உண்மையில் மற்றவர்களின் உணர்வுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை மற்றும் அவர்களின் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் அவர்கள் மிகவும் வெறித்தனமாக இருக்க முடியும். அவர்கள் தங்கள் வார்த்தைகளைப் ஒருபோதும் சிந்திக்க மாட்டார்கள், அவர்கள் மற்றவர்களை காயப்படுத்தக் கூடிய அனைத்து விஷயங்களையும் அவர்கள் செய்வார்கள்.

மிதுனம்
மற்ற அனைத்து ராசிகளையும் விட மிதுன ராசிக்காரர்கள் மனதளவில் முதிர்ச்சியற்றவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் சில நேரங்களில் அவர்கள் தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது. அவர்களால் எந்த ஒரு நியாயமான சூழ்நிலையையும் தாங்க முடியாது, மேலும் அவர்களின் உணர்வுகளை அவர்களுக்குள் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது, இது பெரும்பாலும் அவர்களுக்கு எதிரில் இருப்பவர்களை கடுமையாக துன்புறுத்தும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அனைத்து விஷயங்களிலும் தீவிரமானவர்களாக இருப்பார்கள். அவர்கள் குறிப்பிட்ட நபர்களிடம் மட்டுமே நெருக்கமாக இருப்பார்கள் மற்றும் அதனை ஆரம்பத்திலேயே தெளிவாகக் கூறிவிடுவார்கள். நீங்கள் அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறினால், அவர்கள் உங்களுக்கு நரகத்தை காட்டுவார்கள். அவர்களுக்கு மன்னிப்பதில் எப்போதும் நம்பிக்கைக் கிடையாது, எனவே நீங்கள் அவர்களிடம் மன்னிப்புக்கு காத்திருந்தால் அது ஒருபோதும் கிடைக்காது.

மீனம்
இந்த ராசிக்காரர்கள் தாங்கள் இருக்கும் சூழ்நிலை அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை என்று அறியும்போது அருகில் இருப்பவர்களை காயப்படுத்துவார்கள். அவர்கள் மோதலால் உந்தப்பட்டவர்கள் என்று நன்கு அறியப்பட்டவர்கள் மற்றும் எப்போதும் தன்னிச்சையாக நடந்து கொள்பவர்கள். சூழ்நிலை அவர்கள் விருப்பத்திற்கு எதிராக செல்லும்போது அவர்களின் வெறித்தனம் மிகவும் அதிகரிக்கும். சண்டையிலிருந்து எப்படி பின்வாங்குவது என்று அவர்கள் அறியமாட்டார்கள்.

Desktop Bottom Promotion