Latest Updates
-
செவ்வாயால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிகளின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
ப்ளீச்சிங் செஞ்ச மாதிரி முகம் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
September Matha Rasipalan 2026: செப்டம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
ஆசிரியையின் ஒரு அறை.. உயிரிழந்த சிறுவன்! இது எப்படி சாத்தியம் என்பது குறித்து விளக்கும் டாக்டர்! -
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
Rose Day 2024: உங்க லவ்வர் ராசியை சொல்லுங்க... எந்த கலர் ரோஜாப்பூவை கொடுக்கணும்-ன்னு சொல்றோம்...
Rose Day 2024: காதலித்துக் கொண்டிருக்கும் மற்றும் காதலை முன்மொழிய நினைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருமே காதலர் தினத்திற்காக காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அந்த காதலர் தினத்திற்கு முன் காதலைக் கொண்டாடும் வகையில் மற்றும் காதலிப்பவர்களின் உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ஒரு வாரம் காதலர் வாரம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் காதலர் வாரத்தின் முதல் நாளான பிப்ரவரி 07 ஆம் தேதி ரோஜா தினம் கொண்டாடப்படுகிறது.
காதலின் சின்னமாக ரோஜா கருதப்படுகிறது. ரோஜா தினத்தன்று காதலர்கள் தங்கள் காதலை ரோஜாப்பூக்களை கொடுத்து தங்கள் காதலை வெளிப்படுத்துவார்கள். ஆனால் ரோஜாப்பூக்களில் பல வண்ணங்கள் உள்ளன. எனவே ரோஜா தினத்தில் அதன் நிறம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு அர்த்தங்களைக் கொண்டுள்ளன.

அதே சமயம் ஜோதிடத்தின் படி, காதலன் காதலிக்கு ராசிப்படி ரோஜாப்பூக்களைக் கொடுத்தால், அது அந்த காதலர்களுக்கு இடையே அன்பையும், பிணைப்பையும் அதிகரித்து, காதலில் வெற்றி காணச் செய்யும். உங்களுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இருந்தால் மற்றும் உங்கள் காதல் வெற்றி அடைய விரும்பினால், உங்கள் காதலியின் ராசிக்கேற்ற நிற ரோஜாப்பூக்களைக் கொடுங்கள். இப்போது எந்த ராசிக்காரர்களுக்கு எந்த நிற ரோஜாவை கொடுக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம் மற்றும் விருச்சிகம்
மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களின் அதிபதி செவ்வாய். இந்த ராசியை சேர்ந்தவர்களுக்கு சிவப்பு நிற ரோஜாப்பூக்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். ஏனெனில் செவ்வாய்க்கு உரிய நிறம் சிவப்பு. எனவே இந்த ராசிக்காரர்களுக்கு சிவப்பு நிற ரோஜாப்பூக்களைக் கொடுத்தால், அது வாழ்வில் அன்பை பராமரிக்கும். ஒருவேளை நீங்கள் இந்த ராசிக்காரர்களிடம் காதலை முன்மொழிய நினைத்தால், சிவப்பு நிற ரோஜாப்பூக்களைக் கொடுத்தால், நேர்மறையான பதிலைப் பெறலாம்.
ரிஷபம் மற்றும் துலாம்
துலாம் மற்றும் ரிஷப ராசிக்காரர்களின் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரன் காதல் மற்றும் ஈர்ப்பு ஆகியவற்றின் காரணியாவார். எனவே இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் இயற்கையாகவே அதிக காதலுணர்வைக் கொண்டிருப்பார்கள். இந்த ராசிக்காரர்களிடம் காதலை முன்மொழிய நினைத்தால், அவர்களுக்கு பிங்க் நிற ரோஜாப்பூக்களைக் கொடுக்கலாம்.
மிதுனம் மற்றும் கன்னி
கன்னி மற்றும் மிதுன ராசிக்காரர்களின் அதிபதி புதன். இந்த ராசியை சேர்ந்தவர்களிடம் காதலை தெரிவிக்க நினைத்தால், பச்சை நிற ரோஜாப்பூக்களைக் கொடுத்து தெரிவியுங்கள். இதனால் அவர்களின் அன்பு வாழ்நாள் முழுவதும் கிடைப்பதோடு, வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த சந்திரனுக்கு உரிய நிறம் வெள்ளை. எனவே இந்த கடக ராசியைச் சேர்ந்தவர்களுக்கு வெள்ளை நிற ரோஜாவை கொடுத்து, காதலை முன்மொழிந்தால், நேர்மறையான பதிலைப் பெறலாம். வெள்ளை ரோஜாக்கள் நித்திய அன்பையும் இதயத்தின் உண்மையையும் குறிக்கின்றன.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். ஆகவே சிம்ம ராசியைச் சேர்ந்தவர்களிடம் காதலை முன்மொழிய நினைத்தால், அவர்களுக்கு லாவெண்டர் நிற ரோஜாப் பூக்களைக் கொடுத்து காதலை வெளிப்படுத்துங்கள். இதனால் சிம்ம ராசிக்காரர்களை மகிழ்வித்து, அவர்களின் அன்பைப் பெறலாம்.
தனுசு மற்றும் மீனம்
தனுசு மற்றும் மீன ராசிக்காரர்களின் அதிபதி குரு பகவான். இந்த குரு பகவானுக்கு உரிய நிறம் மஞ்சள். ஆகவே இவ்விரு ராசிக்காரர்களிடம் காதலை வெளிப்படுத்த நினைத்தால், மஞ்சள் நிற ரோஜாப் பூக்களைக் கொடுத்து வெளிப்படுத்துங்கள். மஞ்சள் நிறமானது மகிழ்ச்சி மற்றும் நட்பின் சின்னம். எனவே இந்த நிற ரோஜாப்பூக்களைக் கொடுப்பதால் அன்பு அதிகரிக்கும் மற்றும் நேர்மறையான பதிலையும் பெற வாய்ப்புள்ளது.
மகரம் மற்றும் கும்பம்
மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்களின் அதிபதி சனி பகவான். இந்த ராசிக்காரர்களுக்கு சிவப்பு நிற ரோஜாப்பூக்களைக் கொடுத்தால், அது அன்பில் ஆழத்தைக் கொண்டு வரும். மேலும் சிவப்பு நிற ரோஜாவை இந்த ராசிக்காரர்களுக்கு கொடுப்பது மிகவும் நல்லது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications