🔴 Republic Day 2026 LIVE: வானில் மூவர்ண பலூன்கள் பறக்கவிட்டு தேசிய கீதத்துடன் 77வது குடியரசு தின விழா நிறைவு!

77th Republic Day 2026 Live: இந்தியா தனது 77 ஆவது குடியரசு தினத்தை கோலாகமாக கொண்டாடுகிறது. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் குடியரசு தின கொண்டாட்டங்கள் மிகவும் விமரிசையாக நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதையில் 2026 குடியரசு தின கொண்டாட்டங்கள் மிகவும் சிறப்பாக நடக்கவுள்ளது. குடியரசு தின அணிவகுப்பின் மையக் கருப்பொருளாக தேசிய பாடலான 'வந்தே மாதரம்' இசையின் 150 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் இருக்கும், இது இந்தியாவின் இராணுவ வலிமையையும் அதன் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும்.

இந்த குடியரசு தின விழாவானது இந்திய ஜனாதிபதி திருமதி திரௌபதி முர்மு தலைமையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், மூத்த அமைச்சர்கள், ராணுவத் தலைவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர். அதுவும் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் திரு. அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு காலை 10:30 மணிக்கு தொடங்கும். அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, குடியரசு தின விழா இந்திய நேரப்படி காலை 10:30 மணிக்கு தொடங்கும். இது சுமார் 90 நிமிடங்கள் நீடிக்கும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Republic Day 2026 Live Updates PM Modi s Speech Parade Highlights amp amp Celebrations

  • Jan 26, 2026 12:50 PM
    தேசிய கீதம், வானில் மூவர்ண பலூன்கள் பறக்கவிட்டு 77வது குடியரசு தின விழா நிறைவு

    டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதையில், தேசிய கீதத்துடன், வானில் மூவர்ண பலூன்கள் பறக்கவிட்டு 77வது குடியரசு தின அணிவகுப்பு விழா நிறைவடைந்தது.

  • Jan 26, 2026 12:36 PM
    உத்தரப் பிரதேசத்தின் அலங்கார ஊர்தி

    உத்தரப் பிரதேசத்தின் அலங்கார ஊர்தி 2026 குடியரசு தின அணிவகுப்பில் புந்தேல்கண்டின் பாரம்பரியத்தையும், நவீன தொலைநோக்குப் பார்வையையும் காட்சிப்படுத்தியது.

  • Jan 26, 2026 12:33 PM
    புதுச்சேரியின் அலங்கார ஊர்தி

    2026 குடியரசு தின அணிவகுப்பில் செழுமையான கைவினைப் பாரம்பரியத்தையும் அரோவிலின் தொலைநோக்குப் பார்வையையும் புதுச்சேரியின் அலங்கார ஊர்திகாட்சிப்படுத்துகிறது.

  • Jan 26, 2026 12:27 PM
    ராஜஸ்தான் அலங்கார ஊர்தி

    2026 குடியரசு தின அணிவகுப்பில் ராஜஸ்தான் அலங்கார ஊர்தி பிகானேரின் உஸ்தா கலைப் பாரம்பரியத்தை காட்சிப்படுத்துகிறது.

  • Jan 26, 2026 12:24 PM
    மணிப்பூர் அலங்கார ஊர்தி

    2026 குடியரசு தின அணிவகுப்பில் மணிப்பூர் அலங்கார ஊர்தி, விவசாய நிலங்களிலிருந்து சர்வதேச சந்தைகள் வரையிலான பயணத்தை காட்சிப்படுத்துகிறது.

  • Jan 26, 2026 12:20 PM
    ஒடிசாவின் அலங்கார ஊர்தி

    2026 குடியரசு தின அணிவகுப்பில் ஒடிசாவின் அலங்கார ஊர்தி 'மண்ணிலிருந்து சிலிக்கான் வரை' என்ற கருப்பொருளைக் கொண்டுள்ளது; இது விவசாயம் சார்ந்த நிலையில் இருந்து உயர் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு வளர்ச்சி நோக்கிய பயணத்தை எடுத்துக்காட்டுகிறது.

  • Jan 26, 2026 12:18 PM
    கேரளாவின் அலங்கார ஊர்தி

    2026 குடியரசு தின அணிவகுப்பில் கேரளாவின் அலங்கார ஊர்தி, இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ மற்றும் 100% டிஜிட்டல் எழுத்தறிவு சாதனை ஆகிய இரண்டு மாற்றியமைக்கும் மைல்கற்களை முன்னிலைப்படுத்துகிறது.

  • Jan 26, 2026 12:13 PM
    பண்பாட்டு அமைச்சகத்தின் அலங்கார ஊர்தி

    பண்பாட்டு அமைச்சகத்தின் அலங்கார ஊர்தி, 1875-ல் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயால் இயற்றப்பட்ட 'வந்தே மாதரம்' என்ற தேசியப் பாடலின் 150-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

  • Jan 26, 2026 12:05 PM
    மத்தியப் பிரதேசத்தின் அலங்கார ஊர்தி

    மத்தியப் பிரதேசத்தின் அலங்கார ஊர்தி, அகல்யாபாய் ஹோல்கரின் பாரம்பரியத்தைக் கொண்டாடியது. அதில் அவரது கம்பீரமான சிற்பமும், புகழ்பெற்ற மகேஷ்வர் படித்துறையின் கட்டிடக்கலைப் பாரம்பரியமும் சித்தரிக்கப்பட்டிருந்தன.

  • Jan 26, 2026 12:02 PM
    மேற்கு வங்கத்தின் அலங்கார ஊர்தி

    2026 குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியானது, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அம்மாநிலத்தின் பங்களிப்பை வெளிப்படுத்துகிறது.

  • Jan 26, 2026 11:56 AM
    தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி

    2026 குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியானது, 'வளமையின் மந்திரம்: தற்சார்பு இந்தியா' என்ற கருப்பொருளைக் கொண்டுள்ளது. இது பழங்காலப் பண்பாட்டு வலிமையையும் சமகாலத் தொழில்நுட்பத் தலைமையையும் ஒருங்கே இணைத்து வழங்குகிறது. இந்த ஊர்தி, மாநிலத்தை மரபுகளின் பாதுகாவலராகவும், புதுமைகளால் உந்தப்படும் வளர்ச்சியில் முன்னோடியாகவும் சித்தரிக்கிறது.

  • Jan 26, 2026 11:54 AM
    மகாராஷ்டிராவின் அலங்கார ஊர்தி

    2026 குடியரசு தின அணிவகுப்பில் மகாராஷ்டிராவின் அலங்கார ஊர்தியானது விநாயகர் சதுர்த்திக்காக விநாயகர் சிலைகள் உருவாக்கும் செயல்முறையை பெருமையுடன் காட்சிப்படுத்துகிறது.

  • Jan 26, 2026 11:46 AM
    உள்துறை அமைச்சகத்தின் அலங்கார ஊர்தி

    77வது குடியரசு தின அணிவகுப்பின் போது, ​​ஜனவரி 26 அன்று கர்த்தவ்ய பாதையில் அணிவகுத்துச் சென்ற உள்துறை அமைச்சகத்தின் அலங்கார ஊர்தி, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) ஆகியவற்றைச் சித்தரித்ததுடன், இந்தியாவின் பேரிடர் மேலாண்மைப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்த புஜ் நிலநடுக்கத்தின் 25 ஆண்டுகளை நினைவுகூர்ந்தது.

  • Jan 26, 2026 11:41 AM
    செழுமையான பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் வெளிப்படுத்திய ​​ஜம்மு காஷ்மீர்

    கர்த்தவ்யா பாதையில் நடைபெற்ற பிரம்மாண்டமான 2026 குடியரசு தின அணிவகுப்பின் போது, ​​ஜம்மு காஷ்மீரின் அலங்கார ஊர்தி அந்தப் பகுதியின் செழுமையான பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் காட்சிப்படுத்தியது.

  • Jan 26, 2026 11:40 AM
    சத்தீஸ்கர் மாநிலத்தின் கண்கவர் அலங்கார ஊர்தி

    சத்தீஸ்கர் மாநிலம், கர்த்தவ்ய பாதையில் நடைபெற்ற 77வது குடியரசு தின விழா அணிவகுப்பில் தனது கண்கவர் அலங்கார ஊர்தியின் மூலம் இந்தியாவை பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்தியது.

  • Jan 26, 2026 11:35 AM
    இந்தியக் கடற்படை தனது வலிமையையும் தற்சார்பையும் வெளிப்படுத்தியது

    ‘பாரம்பரியத்தில் வேரூன்றி, தற்சார்பு மற்றும் புதுமையின் திசையில் பயணித்தல்’ என்ற கருப்பொருளைக் கொண்ட, ஐஎன்எஸ் விக்ராந்த் இடம்பெற்ற இந்தியக் கடற்படையின் அலங்கார ஊர்தி, 2026 குடியரசு தின அணிவகுப்பின்போது கர்த்தவ்ய பாதையில் அணிவகுத்துச் சென்றது.

  • Jan 26, 2026 11:30 AM
    முப்படைகளின் ஆபரேஷன் சிந்தூர் அணிவகுப்பு காட்சிபடுத்தப்பட்டது

    2026 ஆம் ஆண்டு 77வது குடியரசு தின அணிவகுப்பில், கர்த்தவ்ய பாதையில், இந்திய ஆயுதப் படைகள் "ஆபரேஷன் சிந்துர்: ஒருங்கிணைப்பின் மூலம் வெற்றி" என்ற தலைப்பில் ஒரு சக்திவாய்ந்த முப்படை அலங்கார ஊர்தியைப் காட்சிப்படுத்தின.

  • Jan 26, 2026 11:23 AM
    2026 குடியரசு தின அணிவகுப்பில் இந்திய கடற்படை குழு

    இந்திய கடற்படை தனது அணிவகுப்புக் குழுவுடன் கர்த்தவ்யா பாதையில் நடைபெறும் 2026 குடியரசு தின அணிவகுப்பில் இணைந்தது.

  • Jan 26, 2026 11:17 AM
    கர்தவ்யா பாதையில் சூர்யாஸ்த்ரா மற்றும் பிரம்மோஸ் ஏவுகணை அமைப்புகள்

    இந்தியா தனது இராணுவ வலிமையை வெளிப்படுத்தும் விதமாக, சூர்யாஸ்த்ரா மற்றும் பிரம்மோஸ் ஏவுகணை அமைப்புகள் கர்தவ்யா பாதையில் காட்சிப்படுத்தப்பட்டன.

  • Jan 26, 2026 11:16 AM
    கர்தவ்யா பாதையில் 61வது குதிரைப்படைப் பிரிவு

    61வது குதிரைப்படைப் பிரிவு கர்தவ்யா பாதையில் கம்பீரமாக அணிவகுத்துச் சென்றது.

  • Jan 26, 2026 11:06 AM
    கர்த்தவ்ய பாதையில் காட்சிபடுத்தப்பட்ட நாக் ஏவுகணை அமைப்பு மற்றும் காலாட்படைப் போர் வாகனம்

    குடியரசு தின அணிவகுப்பின் போது கர்த்தவ்ய பாதையில் நாக் ஏவுகணை அமைப்பு மற்றும் காலாட்படைப் போர் வாகனம் காட்சிப்படுத்தப்பட்டன.

  • Jan 26, 2026 11:02 AM
    'ஆபரேஷன் சிந்தூர்' கொடியுடன் பிரஹார் அணிவகுப்பு கம்பீரமாக பறந்து சென்றது.

    கர்த்தவ்யா பாதையின் மீது, இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்துர்' கொடியை ஏந்திய ஒரு துருவ் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர், இந்திய ராணுவத்தின் 'ருத்ரா' ALH-WSI மற்றும் இந்திய விமானப்படையின் ALH மார்க் IV ஆகியவற்றை உள்ளடக்கிய 'பிரஹார்' அணிவகுப்பு பறந்து சென்றது.

  • Jan 26, 2026 10:57 AM
    மூவர்ணக் கொடி வானில் பறக்க, Mi-17 ஹெலிகாப்டர்கள் மலர்களைத் தூவுகின்றன.

    த்வாஜ் படைப்பிரிவில் உள்ள 129வது ஹெலிகாப்டர் பிரிவின் நான்கு Mi-17 1V ஹெலிகாப்டர்கள் டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதையில் மலர் இதழ்களைப் பொழிகின்றன. இந்த ஹெலிகாப்டர் உருவாக்கம் குரூப் கேப்டன் அலோக் அஹ்லாவத் தலைமையில் நடைபெறுகிறது.

  • Jan 26, 2026 10:52 AM
    விமானப்படை விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா அசோக சக்கர விருதைப் பெற்றார்.

    இந்திய விண்வெளி வீரரும், இந்திய விமானப்படை குரூப் கேப்டனுமான சுபன்ஷு சுக்லாவுக்கு இந்தியாவின் மிக உயரிய அமைதிக்கால வீரதீர விருதான அசோக சக்கரம் வழங்கப்பட்டது.

  • Jan 26, 2026 10:49 AM
    தேசிய கொடிக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை

    டெல்லியில் உள்ள கர்த்தவ்யா பாதையில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 105 மி.மீ இலகுரக களத் துப்பாக்கிகளிலிருந்து பிரம்மாண்டமான 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

  • Jan 26, 2026 10:45 AM
    குடியரசு விழா அணிவகுப்பைக் காண ஐரோப்பிய கவுன்சில் தலைவருடன் இணைந்த குடியரசு தலைவர் முர்மு

    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருடன் இணைந்து, குடியரசு விழா அணிவகுப்பைக் காண டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதையில் உள்ள மரியாதை செலுத்தும் மேடைக்கு வருகை தந்தார்.

  • Jan 26, 2026 10:39 AM
    மூவர்ண தேசிய கொடியை ஏற்றிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

    டெல்லி கர்தவ்யா பாதையில் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

  • Jan 26, 2026 10:16 AM
    போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

    டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடு அஞ்சலி செலுத்தியது.

  • Jan 26, 2026 10:06 AM
    2026 குடியரசு தின அணிவகுப்பைக் காண கர்தவ்யா பாதையில் திரளும் மக்கள்

    2026 ஆம் ஆண்டு குடியரசு தினத்தின் பிரம்மாண்டமான அணிவகுப்பைக் காண கர்தவ்யா பாதையில் மக்கள் பெருந்திரளாகக் கூடியுள்ளனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரைவில் வரவிருக்கின்றனர்.

  • Jan 26, 2026 9:46 AM
    தேசிய கொடியேற்றிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

    மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்றினார்.

READ MORE

Desktop Bottom Promotion