Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
Rama Navami 2023: ராமரின் அருளைப் பெற ராம நவமி நாளில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்!
Rama Navami 2023: இந்து மதத்தில் ராம நவமி மிகவும் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று. ராமர் பிறந்த நாள் தான் ராம நவமியாக கொண்டாடப்படுகிறது. விஷ்ணுவின் ஏழாவது அவதாரம் தான் ராமர். விஷ்ணு பகவான் பூவுலகில் தர்மத்தை நிலைநாட்ட ராமர் அவதாரம் எடுத்ததாக கூறப்படுகிறது. ராம நவமியானது ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் வரும் வளர்பிறை நவமியில் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு ராம நவமி மார்ச் 30 ஆம் தேதி, வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த ராம நவமியன்று ராமர் கோவில்களில் ராமருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். மேலும் ராம பக்தர்கள் இந்நாளில் விரதமிருந்து, ராமரை வழிபடுவதோடு, ராமருக்குரிய மந்திரங்களை சொல்லி, ராமரின் அருளைப் பெற முயற்சிப்பார்கள். ராமர் வட இந்தியாவில் உள்ள அயோத்தியில் பிறந்ததால், ராம நவமி வட இந்தியாவில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

நீங்களும் ராம நவமியன்று ராமரின் அருளைப் பெற விரும்புகிறீர்களா? அப்படியானால் ராமரை மகிழ்விக்கும் ராமருக்குரிய சில மந்திரங்களை ராம நவமி நாளில் பாராயணம் செய்யுங்கள். கீழே பகவான் ராமரின் மிகவும் பிரபலமான மற்றும் சக்தி வாய்ந்த சில மந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ராம நவமி நாளில் சொல்லி ராமரின் அருளைப் பெறுங்கள்.
1. ராம மூல மந்திரம்
ராமரின் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் எளிய மந்திரம் தான் "ஸ்ரீ ராம ஜெயம்"அல்லது "ஓம் ஸ்ரீ ராமாய நமஹ". இந்த மந்திரத்தை ஒருவர் சொன்னால் மன அமைதி, நம்பிக்கை, வெற்றி கிடைக்கும்.
2. ராம தாரக மந்திரம்
"ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்"
3, ராம காயத்ரி மந்திரம்
"ஓம் தசரதாய வித்மஹே சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரசோதயாத்"
4. ராம தியான மந்திரம்
"ஓம் ஆபதாம்பஹர்தாரம் தாதாராம் சர்வசம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் புயோ புயோ நமாம்யஹம்"
5. கோதண்ட ராம மந்திரம்
"ஸ்ரீ ராம் ஜெய ராம் கோதண்ட ராமா"
இந்த மந்திரத்தில் உள்ள கோதண்டம் என்றால் வில் என்று பொருள். ராமர் வில்லை ஏந்தியர் என்பதால், இந்த கோதண்ட ராம மந்திரத்தை சொல்வதன் மூலம், நம்மிடம் உள்ள தீய எண்ணங்கள் அழியும்.



Click it and Unblock the Notifications