ராம நவமி அன்று உங்க ராசிப்படி மந்திரத்தை 108 முறை சொல்லுங்க.. உங்க நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்..

Ram Navami 2024: ராம நவமி இந்து மக்கள் கோலாகலமாக கொண்டாடும் பண்டிகைகளுள் ஒன்றாகும். விஷ்ணுவின் 7 ஆவது அவதாரம் தான் ராமர். இந்த ராமர் பிறந்த நாள் தான் ராம நவமியாக கொண்டாடப்படுகிறது. இந்த ராம நவமி சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை நவமியில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் ராம நவமியானது ஏப்ரல் 17 ஆம் தேதி வருகிறது.

இந்நாளில் ராமர் கோவில்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்படும். மேலும் இந்நாளில் ராம பக்தர்கள் விரதம் இருந்து, ராமரை வழிபடுவார்கள். ராம நவமி நாளில் விரதமிருந்து ராமரை வழிபட்டால் ராமரின் அருள் கிடைப்பதோடு, அனுமனின் அருளும் கிட்டும். ஏனெனில் ராமரின் தீவிர பக்தன் தான் அனுமன்.

Ram Navami 2024 Chant These Mantras According To Your Zodiac Sign On Ram Navami In Tamil

இப்படிப்பட்ட நன்னாளில் 12 ராசிக்காரர்களும் தங்கள் ராசிக்குரிய மந்திரங்களை 108 முறை சொல்வதன் மூலம், ராமரின் ஆசி கிட்டும் மற்றும் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். இப்போது எந்த ராசிக்காரர்கள் எந்த மந்திரத்தை கூற வேண்டும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியை சேர்ந்தவர்கள் ராம நவமி நாளில் 'ஓம் பரமாத்மனே நமஹ' என்ற மந்திரத்தை ஜெபமாலையைப் பயன்படுத்தி 108 முறை பாராயணம் செய்வது நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் பகவான் ஸ்ரீ ராமர் பிறந்த நாளான ராம நவமி நாளில் "ஓம் பரஸ்மை பிரம்மனே நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை சொல்வதன் மூலம், ராமரின் அருளைப் பெறலாம்.

மிதுனம்

மிதுன ராசியைச் சேர்ந்தவர்கள் ராமர் பிறந்த நாளில் 'ஓம் யஜ்வனே நமஹ' என்ற ராம மந்திரத்தை சொல்வதன் மூலம் ராமரின் பரிபூர்ண அருளைப் பெறலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் ராம நவமி நாளில் "ஓம் பித்வாஸ்ஸே நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்வதன் மூலம் ராமரின் அருளால் நீண்ட நாள் ஆசைகள் விரைவில் நிறைவேறும்.

சிம்மம்

சிம்ம ராசியைச் சேர்ந்தவர்கள் ராமர் பிறந்த ராம நவமி நாளில் 'ஓம் ஹர்யே நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை சொல்வதன் மூலம், வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, மகிழ்ச்சி பெருகும்.

கன்னி

கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் ராம நவமி நாளன்று "ஓம் ராம் சேதுக்ருதே நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்வதன் மூலம், ராமர் மகிழ்ச்சியடைந்து, வாழ்க்கையில் சந்தோஷத்தை வாரி வழங்குவார்.

துலாம்

துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் ராமர் பிறந்த நாளான ராம நவமி நாளில் 'ஓம் ராகவாய நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை சொல்வது மிகவும் நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் ராம நவமி நாளில் 'ஓம் ஆதிபுருஷாய நம' என்ற மந்திரத்தை நாள் முழுவதும் பாராயணம் செய்வதன் மூலம், ராமரின் அருளைப் பெறலாம்.

தனுசு

தனுசு ராசியைச் சேர்ந்தவர்கள் ராமர் பிறந்த நாளன்று "ஓம் பராய நமஹ" என்ற மந்திரத்தை சொல்வதன் மூலம், ராமரின் ஆசி கிடைத்து, வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.

மகரம்

மகர ராசியைச் சேர்ந்தவர்கள் ராம நவமி நாளன்று "ஓம் பர்காயை நமஹ" என்ற மந்திரத்தை சொல்லி வந்தால், திருமணமாகாதவர்களுக்கும் நல்ல வரன் கிடைக்கும் மற்றும் திருமண வாழ்வில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் ராம நவமி நாளில் 'ஓம் மஹோதராய நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை சொல்வதன் மூலம், ராமரின் பரிபூர்ண ஆசையைப் பெறலாம்.

மீனம்

மீன ராசியைச் சேர்ந்தவர்கள் பகவான் ஸ்ரீ ராமர் பிறந்த நாளான ராம நவமி நாளில் "ஓம் ப்ராஹ்மணாய நமஹ" என்ற மந்திரத்தை சொல்வதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Monday, April 15, 2024, 22:00 [IST]
Desktop Bottom Promotion