Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
50 ஆண்டுகளுக்கு பின் ராகு சுக்கிரன் உருவாக்கிய விபரீத ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பணம் அதிகம் சேரும்..
Rahu Venus In Pisces Make Vipreet Rajyog: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் கிரக சேர்க்கைகளால் உருவாகும் சுப மற்றும் அசுப யோகங்களும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை உண்டாக்கும்.
அந்த வகையில் செல்வம், அழகு, ஆடம்பரம், காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் மார்ச் 31 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்த மீன ராசியில் ஏற்கனவே நிழல் கிரகமான ராகு பயணித்து வருகிறார். இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளார்கள். இப்போது ராகு சுக்கிர சேர்க்கையால் உருவான விபரீத ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் ராகு சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறக்கூடும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் ராகு சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். தொழிலில் முன்னேறுவதற்கான பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். அதை திறம்பட பயன்படுத்திக் கொண்டால், எதிர்பாராத முன்னேற்றத்தைக் காணலாம். வணிகர்கள் புதிய ஆர்டர்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு ராகு சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்பட போகிறது. புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவீர்கள். வியாபாரிகள் நல்ல நிதி ஆதாயத்தைப் பெறுவார்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். முக்கியமாக பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications