Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
ராகு சுக்கிர சேர்க்கையால் 2024-ல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Rahu Venus Conjunction In 2024: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் அதிபதி தான் சுக்கிரன். இந்த சுக்கிரன் செல்வம், ஆடம்பரம், காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். மேலும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
அதே சமயம் ராகு நிழல் கிரகமாவார். இந்த ராகு தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். மேலும் 2024 ஆம் ஆண்டு முழுவதுமே மீன ராசியில் பயணிக்கவுள்ளார். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் சுக்கிரன் மீன ராசிக்குள் நுழைகிறார். இதனால் மீன ராசியில் ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது.

இப்படி இவ்விரு கிரகங்களின் சேர்க்கை நிகழ்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கையானது சிறப்பாக இருக்கப் போகிறது. இப்போது மீன ராசியில் நிகழும் ராகு சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் ராகு சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் 2024-ல் இந்த ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறவுள்ளார்கள். ஆளுமை கவரக்கூடியதாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடக்கூடும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். உடன் பிறந்தவர்களுடனான உறவு மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் ராகு, சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் 2024-ஆம் ஆண்டில் புதிய வீடு, சொத்து, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாயப்புக்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் பதவி உயர்வுடன், சம்பள உயர்வையும் பெறலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் தந்தையுடனான உறவு வலுவாகும்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவத வீட்டில் ராகு, சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் 2024-ல் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய வீடு, வாகனம், சொத்துக்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு வலுபெறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications