Latest Updates
-
ஆகஸ்ட் கடைசியில் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் வேலையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்! -
செப்டம்பரில் இரண்டு முறை ராசி மாறும் புதன்: சகல சௌபாக்கியத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
1 கப் ரவையும், 1 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. அள்ளும்.. -
கழிப்பறையில் ஐஸ் கட்டிகளை கொட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தமாம்.. எச்சரிக்கும் எய்ம்ஸ் டாக்டர்! -
இட்லி அரிசியும், அப்பளமும் இருந்தா இந்த கேரளா ஸ்டைல் அப்பள வடையை செய்யுங்க - வேற லெவலில் இருக்கும் -
சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 5 ராசிகளின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
10 கிராம் 1 கோடிக்கு விற்கப்படும் உலகின் விலையுயர்ந்த மரம் எது தெரியுமா? இதுல அப்படி என்னதான் இருக்கு? -
இட்லி, தோசைக்கு இப்படி வெங்காய சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறாக இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம்
10 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் ராகு சுக்கிர சேர்க்கை: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப்போகுது...
Rahu Venus Conjunction 2024 In Pisces After 10 Years: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது சில சமயங்களில் கிரக சேர்க்கைகள் நிகழும். இவ்வாறு நிகழும் சேர்க்கைகள் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் அசுரர்களின் குருவான சுக்கிரன் மார்ச் மாதத்தில் மீன ராசியில் நுழையவுள்ளார். இந்த மீன ராசியில் ஏற்கனவே ராகு பயணித்து வருகிறார். இதனால் மீன ராசியில் ராகு மற்றும் சுக்கிரன் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது 10 ஆண்டுகளுக்கு பிறகு நிகழவுள்ளது.

இதனால் இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த சேர்க்கையால் திடீர் பண வரவையும், முன்னேற்றத்தையும் காணவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் ராகு சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படலாம். சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறலாம். சுக்கிரனின் அருளால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலை மிகவும் வலுவாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் ஒரு பெரிய ஒப்பந்தங்களைப் பெறலாம்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் ராகு சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும். நல்ல பொருள் இன்பங்களைப் பெற வாய்ப்புள்ளது. பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் நல்ல நன்மைகளைப் பெறலாம். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், மருத்துவம் போன்றவற்றில் உள்ளவர்களுக்கு சிறப்பாக இருக்கும். சிலர் புதிய சொத்துக்களையும், வாகனங்களையும் வாங்க வாய்ப்புக்களைப் பெறலாம்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் ராகு சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையை மாற்ற நினைத்துக் கொண்டிருந்தால், இக்காலத்தில் ஒரு புதிய வேலை உங்களைத் தேடி வரும். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். வணிகர்கள் எதிர்பாராத அளவில் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications