Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ராகுவின் அருளால் 2024 ஜூலை வரை இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும்...
Rahu Transit In Revati Nakshatra: வேத ஜோதிடத்தில் ராகு நிழல் கிரகமாகும். இந்த ராகு 18 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். மேலும் ராகு எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் தான் பயணிப்பார். ராகுவின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது, அது ஒருவரது காதல் வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, நிதி நிலை, படிப்பு, ஆரோக்கியம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் ராகு 2023 அக்டோபர் 30 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழைந்தார். அதோடு அப்போது தான் அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து ரேவதி நட்சத்திரத்திற்கும் மாறினார். சுமார் 8 மாதங்களுக்கு பின் ராகு நட்சத்திரத்தை மாற்றியுள்ளார். ரேவதி நட்சத்திரமானது 27 நட்சத்திரங்களில் கடைசி நட்சத்திரமாகும். மேலும் இந்த நட்சத்திரத்தில் குருவின் தாக்கமும் உள்ளது.

ரேவதி நட்சத்திரத்திற்கு ராகு சென்றுள்ளதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர மாற்றத்தால் சிறப்பான பலனைப் பெறவுள்ளார்கள். முக்கியமாக ராகு இந்த ரேவதி நட்சத்திரத்தில் 2024 ஆம் ஆண்டின் ஜூலை மாதம் வரை இருப்பார். இப்போது ரேவதி நட்சத்திரத்திற்கு சென்றுள்ள ராகுவால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
மிதுனம்
ராகு ரேவதி நட்சத்திரத்திற்கு சென்றுள்ளதால், மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். மிதுன ராசியின் அதிபதி புதன் என்பதால், ராகு இந்த ராசிக்காரர்களுக்கு நற்பலனை வழங்குவார். ஏனெனில் ராகுவும், புதனும் நண்பர்கள். இதனால் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். நிதி நிலை வலுவாகும். சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த ராகு நட்சத்திர பெயர்ச்சியால் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்பினால், அதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். தொழில் ரீதியாக சிறப்பான பலன்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் நல்ல வேலை வாய்ப்பைப் பெற வாய்ப்புள்ளது. இருப்பினும் சிறிது மன உளைச்சலை சந்திக்க நேரிடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2024 ஆம் ஆண்டின் ஜூலை மாதம் வரை அற்புதமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல பண ஆதாயம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் இலக்குகளை அடைவார்கள். சிலருக்கு சிறப்பான செயல்திறனால் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications