Latest Updates
-
உலகின் முதல் ஏவுகணையை உருவாக்கிய நாடு எது தெரியுமா? அமெரிக்காவும் இல்ல, ரஷ்யாவும் இல்ல -
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம்
18 ஆண்டுகளுக்கு பின் மீனம் செல்லும் ராகு: அக்டோபர் 30 முதல் இந்த 3 ராசிகளின் தலைவிதியே மாறப்போகுது..
Rahu Transit In Pisces On October 2023: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். நவகிரகங்களில் ராகு, கேதுவைத் தவிர, மற்ற கிரகங்கள் அனைத்தும் நேர்கதியில் தான் பயணிக்கும்.
ஆனால் ராகு, கேது நிழல் கிரகங்கள் மற்றும் இவ்விரு கிரகங்களும் எப்போதும் வக்ர நிலையில் தான் பயணிக்கும். அதாவது பின்னோக்கி தான் பயணிக்கும். மேலும் இவ்விரு கிரகங்களும் ராசியை மாற்றுவதற்கு 18 மாதங்கள் ஆகும்.

அந்த வகையில் நிழல் கிரகமான ராகு தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராகு அக்டோபர் 30 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து குரு பகவானின் மீன ராசிக்கு செல்கிறார். ராகு சுப கிரகத்தின் ராசியில் இருந்தால், அது நற்பலனையும், அதுவே அசுப கிரகத்தின் ராசியில் இருந்தால் மோசமான பலனையும் வழங்கும்.
மங்களகரமான கிரகமான குரு பகவானின் ராசிக்கு ராகு செல்வதால், இந்த ராகு பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுககு மிகவும் அட்டகாசமாக இருக்கப் போகிறது. இப்போது மீனம் செல்லும் ராகுவால் சிறப்பான பலன்களைப் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பல ஆசைகள் நிறைவேறும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். இதுவரை முன்னேற்றத்தைக் காணாதவர்கள் இந்த ராகு பெயர்ச்சிக்கு பின் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணியிடத்தில் தங்கள் வேலையில் மிகுந்த சிரமத்தை சந்தித்தவர்கள், ராகு பெயர்ச்சிக்கு பின் அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து முடிப்பார்கள்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், நம்பிக்கையும் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ராகு பெயர்ச்சிக்கு பின் முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும்.
பணிபுரிபவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் செயல்திறனால் உயர் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. எந்த வேலை செய்தாலும், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிப்பதால், அனைத்து வேலைகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வழக்கத்தை விட நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தனிப்பட்ட வாழ்க்கையில் சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் மற்றும் அந்த முடிவுகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications