Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
ராகுவின் அருளால் 2024-ல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பிருக்கு.. உங்க ராசி இதுல இருக்கா?
Rahu Transit 2024: வேத ஜோதிடத்தில் ராகு ஒரு நிழல் கிரகமாக கருதப்படுவதோடு, ஒரு பாவ மற்றும் கொடூர கிரகமாகவும் கருதப்படுகிறது. எனவே தான் ராகு என்றாலே அனைவரும் பயப்படுகிறார்கள்.
ஆனால் ராகு எப்போதும் கெடு பலன்களை மட்டுமே தரக்கூடியவர் அல்ல. அவரின் அருளால் பணக்காரராகவும், பிரபலமாகவும் வாய்ப்புள்ளது. ராகு நிழல் கிரகம் என்பதால், சொந்த ராசி என்று எதுவும் இல்லை. மேலும் ராகு எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் தான் பயணிக்கும்.

ராகு ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் வரை பயணிப்பார். தற்போது ராகு குரு பகவானின் ராசியான மீன ராசியில் பயணித்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபரில் தான் ராகு மீன ராசியில் நுழைந்துள்ளார். இதனால் 2024 ஆம் ஆண்டு முழுவதும் ராகு மீன ராசியில் தான் பயணிக்கவுள்ளார்.
அடுத்து 2025 ஆம் ஆண்டில் தான் ராசியை மாற்றுவார். இப்படி 2024-ல் ராகு மீன ராசியில் பயணிப்பதால், இந்த ஆண்டில் ராகுவின் அருளால் சில ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
2024 ஆம் ஆண்டு முழுவதும் மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் ராகு பயணிக்கவுள்ளார். இதனால் இந்த ஆண்டானது மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வெளிநாடு செல்ல வேண்டுமென்ற ஆசை இருந்தால், இந்த ஆண்டில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டில் இருந்து நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வர வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் ராகு பயணிக்கவுள்ளார். இதனால் 2024 ஆம் ஆண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வாழ்க்கையில் பல சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக, இந்த ஆண்டில் முன்னேற்றத்திற்கான சில சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தொடர்பாக வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.
கடகம்
2024 ஆம் ஆண்டு முழுவதும் கடக ராசியின் 9 ஆவது வீட்டில் ராகு பயணிக்கவுள்ளார். 9 ஆவது வீட்டில் ராகு இருப்பதால் கடக ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தொடர்பாக அடிக்கடி வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும். வெளிநாடு தொடர்பான வியாபாரம் செய்பவர்களுக்கு, இந்த ஆண்டில் நல்ல நிதி நன்மைகளுடன், வெற்றியும் கிடைக்கும். முக்கியமாக அதிர்ஷ்டத்தின் ஆதரவு இந்த ஆண்டில் முழுமையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











