Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
ராகு டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரர்களின் மனதை கெடுத்து சிக்கலில் சிக்க வைப்பார்.. உஷாரா இருங்க..
Rahu Transit 2024: வேத ஜோதிடத்தில் உள்ள நவகிரகங்களில் ராகு, கேது ஆகிய இவ்விரு கிரகங்களும் நிழல் கிரகங்கள் மட்டுமின்றி, எதிர்மறை கிரகங்களும் கூட. இந்த கிரகங்கள் ஒருவரது வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். சொல்லப்போனால் ஒருவரது மனநிலையை மோசமாக பாதித்து வாழ்க்கையையே அழிக்கக்கூடிய அளவில் மோசமான கிரகங்களாகும்.
இப்படிப்பட்ட ராகு மற்றும் கேதுவிற்கு சொந்த ராசிகள் என்று எதுவும் இல்லை. அதேப்போல் இவ்விரு கிரகங்களும் மற்ற கிரகங்களைப் போல் நேர்பாதையில் பயணிக்காமல், பின்னோக்கி வக்ர நிலையில் தான் பயணிக்கும். இப்படிப்பட்ட ராகு தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் ராகு 2024 ஆம் ஆண்டு முழுவதுமே இருப்பார்.

ராகு இந்த ராசியில் இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு நன்றாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருக்கும். குறிப்பாக 3 ராசிக்காரர்களின் மனதை ராகு கெடுத்து, பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வைப்பார். இப்போது ராகுவின் நிலையால் 2024 டிசம்பர் வரை எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் ராகு உள்ளார். இதனால் கன்னி ராசிக்காரர்கள் 2024 ஆம் ஆண்டின் டிசம்பர் வரை மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் மற்றும் தொழில் செய்யும் இடத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. காதலித்து வந்தால், காதலன்/காதலியுடன் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமணமானவர்களின் வாழ்க்கையிலும் சற்று மனக்கசப்புகள் அதிகரிக்கலாம். எனவே டிசம்பர் வரை அனைத்து விஷயங்களிலும் சற்று கவனமாக இருங்கள்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் ராகு பயணித்து வருகிறார். எனவே இந்த ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் வழக்கத்தை விட அதிக கவனமாக இருக்க வேண்டும். ஆடம்பர செலவுகளை அதிகம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பண பிரச்சனை அதிகரித்துவிடும். குடும்ப வாழ்க்கை மிகவும் டென்சனாக இருக்கும். டிசம்பர் வரை உங்கள் பேச்சை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில் உங்கள் பேச்சால் பிரச்சனைகள் அதிகம் வர வாய்ப்புள்ளது. அப்படியே பிரச்சனைகளுக்கு தீர்வு காண பேசினாலும், என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து பேசுங்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் ராகு உள்ளார். இதனால் கும்ப ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் டிசம்பர் வரை செலவுகள் மிகவும் அதிகமாக இருக்கும். இப்படி அதிக செலவு செய்வதாலேயே நிறைய பிரச்சனைகளை சந்திப்பீர்கள். மேலும் இந்த ஆண்டு நீங்கள் பயணம் மேற்கொள்ளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதலீடு செய்ய நினைத்தால், அனுபவசாலிகளின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பெரிய நிதி இழப்பை சந்திப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications