Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ராகு மீன ராசியில் இருப்பதால் 2025 வரை இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Rahu Transit 2024: வேத ஜோதிடத்தில் ராகு ஒரு நிழல் கிரகமாவார். கிரகங்களிலேயே ராகு எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவர். இவர் ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் வரை இருப்பார். ஜோதிடத்தின் படி, ஒருவரது ஜாதகத்தில் மோசமான நிலையில் இருந்தால், அந்நபரின் வாழ்க்கையே படுமோசமாக இருக்கும். ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
இப்படிப்பட்ட ராகு 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழைந்தார். இந்த மீன ராசியில் ராகு 2025 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் சனி பகவானின் ராசியான கும்ப ராசிக்குள் நுழைவார்.

ராகு மீன ராசியில் பயணிப்பதால், 2025 ஆம் ஆண்டு வரை சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது மீன ராசியில் பயணிக்கும் ராகுவால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் ராகு உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அபரிமிதமான செல்வத்தைப் பெறுவார்கள். எதிர்பாராத வழிகளில் இருந்து நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வெளிநாட்டில் வியாபாரம் செய்து வந்தால், நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். சிலர் புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். புதிய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வேலை தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இதனால் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட முடியாது. இருப்பினும் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் ராகு உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு 2025 வரை அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருக்கும். வேலை தொடர்பாக வெளியூர் செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி ரீதியாக மிகவும் நன்றாக இருக்கும். இருப்பினும் செலவுகள் சற்று அதிகமாக இருக்கும். இருந்தாலும், அதை எளிதில் சமாளிப்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு 2025 வரை மிகவும் நன்றாக இருக்கும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். மொத்தத்தில் 2025 வரை இந்த ராசிக்காரர்களுக்கு நன்றாகவே இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் ராகு உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எல்லா துறைகளிலும் வெற்றி பெறுவதோடு, நல்ல நிதி நன்மைகளையும் பெறுவார்கள். முதலீடுகளை செய்தால் அதில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவீர்கள். அதோடு திடீர் நிதி நன்மைகளும் கிடைக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்து அதிகம் சிந்திப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications