Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
வீட்டில் பணவரவு அதிகரிக்கணுமா? அமேசான் சேலில் இந்த வாஸ்து பொருட்களை மிஸ் பண்ணாதீங்க! -
செஃப் வாணி அவர்களின் முருங்கைக்காய் பொரியல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... செமயா இருக்கும்.. -
Hanta Virus: கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? -
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்! -
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்!
ராகு நட்சத்திர பெயர்ச்சியால் 2024-ல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா
Rahu Transit 2024 In Revati Nakshatra: ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாக கருதப்படுகின்றன. இவ்விரு கிரகங்களையும் பாவ கிரகங்களாகவும் கருதப்படுவதுண்டு. இந்த இரண்டு கிரகங்களும் 18 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்கள்.
அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். தற்போது ராகு குரு பகவானின் மீன ராசியில் பயனித்து வருகிறார். மேலும் மீன ராசியின் ரேவதி நட்சத்திரத்தின் 3 ஆவது கட்டத்தில் நுழைந்துள்ளார்.

ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி புதன். ரேவதி நட்சத்திரத்தில் ராகு பயணிப்பதால், அதன் தாக்கமானது அனைத்து ராசிக்காரர்களிடமும் காணப்படும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் இந்த ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள்.
ராகு பகவான் இந்த ஆண்டு முழுவதும் மீன ராசியில் இருப்பதால், 3 ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் ராகு பயணித்து வருகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, இருவருக்கும் இடையேயான உறவு மேம்படும். திருமணமாகாதவர்கள் நீண்ட நாட்களாக நல்ல வரன் கிடைக்காமல் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருந்தால், இந்த ஆண்டில் நல்ல வரன் கிடைத்து, திருமணம் நடைபெறும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் ராகு உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். மிதுனம் புதனின் ராசி. அதே வேளையில் புதனின் நட்சத்திரத்தில் ராகு உள்ளார். எனவே மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். நிறைய பண பலன்கள் கிடைக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் ராகு பயணித்து வருகிறார். கன்னி ராசியின் அதிபதியும் புதன் என்பதால், இந்த ராசிக்காரர்களுக்கும் ராகு நல்ல பலன்களை அளிப்பார். இந்த ஆண்டில் ஜூலை மாதத்திற்குள் புதிய தொழிலை தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும். உங்களின் இலக்கை இந்த ஆண்டில் சிறப்பாக அடைவீர்கள். பணிபுரிபவர்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும். சிலர் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. முக்கியமாக நீண்ட நாட்களாக சந்தித்து வந்த உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளில் இருந்து முழுமையாக விடுபடுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications