Latest Updates
-
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்.. -
ஆகஸ்ட் கடைசியில் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் வேலையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்! -
செப்டம்பரில் இரண்டு முறை ராசி மாறும் புதன்: சகல சௌபாக்கியத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
1 கப் ரவையும், 1 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. அள்ளும்.. -
கழிப்பறையில் ஐஸ் கட்டிகளை கொட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தமாம்.. எச்சரிக்கும் எய்ம்ஸ் டாக்டர்! -
இட்லி அரிசியும், அப்பளமும் இருந்தா இந்த கேரளா ஸ்டைல் அப்பள வடையை செய்யுங்க - வேற லெவலில் இருக்கும்
18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
Rahu Sun Venus Conjunction 2024 In Pisces After 18 Years: வேத ஜோதிடத்தின் படி, அழகு, காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் தற்போது கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 31 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மீன ராசியில் ஏற்கனவே ராகு மற்றும் சூரியன் ஒன்றாக பயணித்து வருகின்றனர்.
ராகு சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 31 ஆம் தேதி நிகழும் சுக்கிர பெயர்ச்சிக்கு பின் மீன ராசியில் சூரியன், ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையானது சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது. அதுவும் இந்த கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.

இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகத்தால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. முக்கியமாக தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளது. இப்போது மீன ராசியில் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பணத்தைப் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சேமிப்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தத்தைப் பெறுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் பெரிய உயர்வு ஏற்படப் போகிறது அலுவலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பாராட்டை வாங்கித் தரும். முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் ஆதரவாக இருப்பதால் பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் நல்ல பலனைப் பெறலாம்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் ராகு, சூரிய மற்றும் சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நிலுவையில் உள்ள பல முக்கியமான வேலைகள் இந்த 3 கிரகங்களின் சேர்க்கை காலத்தில் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இக்காலத்தில் உங்களின் திட்டங்கள் அனைத்தும் நல்ல பலனைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications